Asianet News TamilAsianet News Tamil

டெஸ்ட் அணியில் இப்படியொரு மிடில் ஆர்டரை நெனச்சு பாருங்க.. ஆனால் அதுக்கு ஒண்ணே ஒண்ணு செய்யணும்.. முன்னாள் வீரரின் ஐடியா

இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டரில் 3,4,5 ஆகிய மூன்று வரிசைகளில் அவர்கள் மூவரும் இறங்கினால் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள் - கவுதம் கம்பீர். 

gambhirs middle order for indian test team
Author
India, First Published Aug 10, 2019, 5:02 PM IST

இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரும் துணை கேப்டனுமான ரோஹித் சர்மா, தலைசிறந்த ஒருநாள் மற்றும் டி20 வீரர் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவரது டெஸ்ட் கெரியர் இதுவரை நன்றாக அமையவில்லை. 

ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதம் விளாசிய ஒரே வீரராக கெத்தாக வலம்வரும் ரோஹித் சர்மா, அசால்ட்டாக சதம் விளாசக்கூடியவர். ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் பல சாதனைகளை குவித்து தலைசிறந்த வீரராக திகழும் ரோஹித்துக்கு டெஸ்ட் வாய்ப்புகள் தொடர்ச்சியாக கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதை அவர் சரியாக பயன்படுத்தி கொள்வதில்லை. 

2013ம் ஆண்டே டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிவிட்ட ரோஹித் சர்மா, இந்திய அணிக்காக வெறும் 27 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி 1585 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அவ்வப்போது டெஸ்ட் அணியில் எடுக்கப்படுவதும் நீக்கப்படுவதுமாக இருக்கும் ரோஹித், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். 

gambhirs middle order for indian test team

இந்நிலையில், டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு கம்பீர் எழுதியுள்ள கட்டுரையில், ரோஹித் சர்மா கண்டிப்பாக பெரிய டெஸ்ட் வீரராக ஜொலிப்பார் என அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பதோடு, ரோஹித் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக திகழ ஒரு ஆலோசனையையும் வழங்கியுள்ளார். 

இதுகுறித்து எழுதியுள்ள கம்பீர், ரோஹித் சர்மா ஒரு தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர். ஆனால் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை யாராவது கண்டிப்பாக சொல்ல வேண்டிய தருணம் இது என நினைக்கிறேன். ரோஹித் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக பெரிய இன்னிங்ஸ் ஆடி பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும். 

gambhirs middle order for indian test team

ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் இருக்கும் ஃபார்மை டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தொடர வேண்டும். ராகுல் டிராவிட் அல்லது சச்சின் டெண்டுல்கரிடம் ரோஹித்தை சில மாதங்கள் பயிற்சி எடுக்க வைக்க வேண்டும். அவர்கள் ரோஹித்தின் பேட்டிங்கை மேம்படுத்தி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயார்படுத்தி அனுப்பிவிடுவார்கள். அப்படி ரோஹித் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயாராகிவிட்டால், இந்திய அணியின் மிடில் ஆர்டரை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். மூன்றாம் வரிசையில் புஜாரா, நான்காம் வரிசையில் விராட் கோலி மற்றும் ஐந்தாம் வரிசையில் ரோஹித் சர்மா. இது செமயா இருக்கும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios