அஃப்ரிடியும் கம்பீரும் எப்போது எலியும் பூனையும் போன்றவர்கள். அஃப்ரிடியும் கம்பீரும் களத்தில் மட்டுமல்லாது களத்திற்கு வெளியேயும் முட்டி மோதுவதை வழக்கமாக கொண்டவர்கள். கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்டு, இந்தியா - பாகிஸ்தான் விவகாரங்களிலும் கடும் வாக்குவாதம் செய்வார்கள். அவர்கள் இருவருக்கும் அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய காலத்திலிருந்தே ஆகாது. 

இந்நிலையில், அஃப்ரிடியின் சுயசரிதையான கேம்சேஞ்சர் கடந்த ஆண்டு வெளியானது. அதில் கம்பீரை பற்றி கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தார் அஃப்ரிடி. அதாவது “கிரிக்கெட்டில் குறிப்பிடும்படியான எந்தவொரு சாதனையும் செய்யாத காம்பீர், ஒரு சாதாரணமான வீரர் மட்டுமே. ஆனால் அவரது செயல்பாடுகளும் அணுகுமுறையும் ரொம்ப திமிராக இருக்கும். அவருக்கு மனதுக்குள் பிராட்மேன் என்று நினைப்பு. தன்னை பெரிய ஆளாக நினைத்துக்கொண்டு திமிராக நடந்துகொள்வார் என்று கடுமையாக விமர்சித்திருந்தார். 

இந்த விமர்சனத்துக்கு அப்போதே பதிலடி கொடுத்த கம்பீர், கோமாளி.. உனக்கு இதுவே வேலையா போச்சு.. மருத்துவ சிகிச்சைக்காக பாகிஸ்தானியர்களுக்கு இந்திய அரசு விசா வழங்குகிறது. இந்தியாவிற்கு வா.. நான் தனிபட்ட முறையில் உன்னை நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்து செல்கிறேன் என்று கடுமையாக பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள இந்த சூழலில், அஃப்ரிடி தொடர்பான விஷயங்களை பதிவிட்ட ஒரு பப்ளிகேஷன், இதை மீண்டும் பதிவிட்டதால், கம்பீர் மீதான அஃப்ரிடியின் விமர்சனம் மறுபடியும் வைரலானது.

அதை பார்த்ததும் அஃப்ரிடி மீது அடங்கியிருந்த கோபம், கம்பீருக்கு மீண்டும் வெளிவந்தது. தன்னை பெரிய சாதனையாளன் என விமர்சித்த அஃப்ரிடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக டுவீட் செய்துள்ள கம்பீர், தனது வயதையே நினைவில் வைத்துக்கொள்ள முடியாத ஒரு நபருக்கு, எனது சாதனை மட்டும் எப்படி ஞாபகம் இருக்கும்? நான் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன் அஃப்ரிடி... 2007 டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதியது. அந்த போட்டியில் கம்பீர் 54 பந்தில் 75 ரன்கள் அடித்தார். அஃப்ரிடி முதல் பந்திலேயே டக் அவுட்.. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்திய அணி உலக கோப்பையை வென்றது. ஆம்.. நான் attitude காட்டும் நபர் தான்.. ஆனால் எல்லாரிடமும் அல்ல.. பொய்யர்கள், துரோகிகள், சந்தர்ப்பவாதிகள் ஆகியோருக்கு எதிராக attitude காட்டுவேன் என்று கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.

அஃப்ரிடி தனது வயதை பொய்யாக கூறி ஏமாற்றி நீண்டகாலம் கிரிக்கெட் ஆடினார் என்பது பொதுவாக உள்ள ஒரு விமர்சனம்.. அது உண்மையும் கூட... அதனால்தான் அதை சுட்டிக்காட்டி நக்கலாக பதிலடி கொடுத்துள்ளார் கம்பீர்.