Asianet News TamilAsianet News Tamil

நான் ஜிலேபி சாப்புடுறத விட்டுட்டா எல்லாம் சரியாயிடுமா..? கம்பீர் அதிரடி

முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர், கடந்த மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆனார். 
 

gambhir defends himself in delhi air pollution meeting issue
Author
India, First Published Nov 19, 2019, 4:07 PM IST

கிரிக்கெட் வீரர்களில் மிகவும் நேர்மையான மற்றும் வெளிப்படையான வீரர் கவுதம் கம்பீர். தனக்கு தவறு என்று பட்டால், விளைவுகளை பற்றியெல்லாம் கவலைப்படாமல் நேரடியாக உண்மையை பேசக்கூடிய துணிச்சல் மிக்கவர். டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசு குறித்து அடிக்கடி டுவீட் செய்து வந்தார் கம்பீர். 

காற்று மாசு குறித்து டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசை விமர்சிக்கும் விதமாக டுவீட் செய்துவந்தார். இந்நிலையில், காற்று மாசை தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க கடந்த 15ம் தேதி டெல்லியில், நாடாளுமன்ற குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியவர்களில் கம்பீரும் ஒருவர். 

ஆனால் கம்பீர் இந்தூரில் நடந்த இந்தியா - வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டிக்கு வர்ணனை செய்ய சென்றுவிட்டதால், இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. கம்பீர், லட்சுமணன் ஆகிய வர்ணனையாளர்கள் காலையில் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்ட புகைப்படத்தை லட்சுமணன் டுவிட்டரில் பதிவு செய்ய, கம்பீர் சிக்கலில் சிக்கினார். 

gambhir defends himself in delhi air pollution meeting issue

காற்று மாசு குறித்து கருத்துகளை தெரிவித்துவரும் கம்பீர், அதை தடுப்பது குறித்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் ஜாலியாக இருப்பதை கண்ட, டெல்லி ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி சும்மா விடுமா..? கவுதம் கம்பீரை கடுமையாக தாக்கி டுவீட் செய்தது. ரசிகர்களும் கம்பீரின் செயலை கடுமையாக விமர்சித்ததோடு கிண்டலும் அடித்தனர். கம்பீர் ஜிலேபி சாப்பிட்டதை கடுமையாக விமர்சித்துவந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக கம்பீர் தொடர்ச்சியாக விமர்சனம் செய்யப்பட்டுவந்த நிலையில், இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தடாலடியாக பதிலளித்தார் கம்பீர். நான் ஜிலேபி சாப்பிடுவதை நிறுத்திவிட்டால், டெல்லியில் காற்று மாசு இருக்காது என்றால், நான் இனிமேல் ஜிலேபி சாப்பிடுவதையே விட்டுவிடுகிறேன் என்று தெரிவித்தார்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios