ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து விரைவில் குணமடைய இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியை அறிமுகப்படுத்தியவர் லலித் மோடி. அதன் முன்னாள் தலைவருமாக இருந்துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் போது நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக லலித் மோடி மீது குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக அவர் லண்டனில் செட்டிலானார். இந்த நிலையில், லலித் மோடி 3 வாரங்களுக்குப் பிறகு இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கடும் நிமோனியாவுடன் 2 வாரங்களில் இரட்டை கொரோனா நோயுடன் வெளியேறுவதற்கு பல முறை முயற்சித்த பிறகு இறுதியாக 2 மருத்துவர்கள் மற்றும் சூப்பர் ஸ்டார் மகனுடன் ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக தரையிறங்கினேன். அவர் எனக்கு லண்டனில் நிறைய செய்தார்.

சேட்டக்கார பசங்களா இருக்காங்களே: ஆட்டம் ஓவராத்தான் இருக்கு: வைரலாகும் கோலி, இஷான் கிஷான் டான்ஸ் வீடியோ!

கடந்த 3 வாரங்களில் அவர் மெக்சிகோ நாட்டிலும், பின்னர் இங்கிலாந்தின் லண்டன் நகரிலும் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர்களது பொன்னான நேரத்தை எனக்காக செலவழித்த 2 மருத்துவர்களின் தியாகம் குறித்து வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகளே இல்லை. மீண்டு வர இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது. 24 மணி நேரமும் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், லலித் மோடி விரைவில் குணமடையுங்கள் என்று வாழ்த்து தெரித்துள்ளார். 

அடுத்தடுத்த போட்டிகளில் பார்ல் ராயல்ஸ், டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வெற்றி!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடிகை சுஷ்மிதா சென் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, எனது துணையான சுஷ்மிதா சென் உடன் புதிய வாழ்க்கையை தொடங்குகிறேன். அவரை நான் காதலிக்கிறேன். இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. விரைவில் திருமணம் நடைபெறும் என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் வாய்ப்பு கொடுத்த ரஞ்சி டிராபி சாதனை: நியூசிலாந்துக்கு எதிரான டி20 அணியில் இடம் பிடித்த பிரித்வி ஷா!

View post on Instagram

View post on Instagram