கொரோனா பொதுமுடக்கத்தால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர், தங்களது ஆல்டைம் லெவனை தேர்வு செய்துவருகின்றனர். அந்தவகையில் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரரும், சீனியர் விளையாட்டுத்துறை பத்திரிகையாளருமான ராஜ்தீப் சர்தேசாய், இந்திய ஒருநாள் அணியின் ஆல்டைம் லெவனை தேர்வு செய்துள்ளார். 

இந்த அணியின் தொடக்க வீரர்களாக ஆல்டைம் கிரேட் சச்சின் டெண்டுல்கரையும் தற்போதைய இந்திய அணியின் துணை  கேப்டனும் இரட்டை சத நாயகனுமான ரோஹித் சர்மாவையும் தேர்வு செய்துள்ளார். சச்சினின் ஓபனிங் பார்ட்னர்கள் சேவாக் மற்றும் கங்குலி ஆகிய இருவரையுமே தேர்வு செய்யாமல், ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்கள் என்ற அசாத்திய சாதனையை தன்னகத்தே கொண்ட ரோஹித் சர்மாவை ராஜ்தீப் தேர்வு செய்துள்ளார்.

மூன்றாம் வரிசை வீரராக விராட் கோலியையும் நான்காம் வரிசையில் முன்னாள் கேப்டன் அசாருதீன் அல்லது மொஹிந்தர் அமர்நாத் ஆகிய இருவரில் ஒருவரையும் தேர்வு செய்துள்ள ராஜ்தீப் சர்தேசாய், ஐந்தாம் வரிசைக்கு யுவராஜ் சிங்கையும் விக்கெட் கீப்பராக தோனியையும் தேர்வு செய்துள்ளார்.

ஆல்ரவுண்டர்களாக கபில் தேவ் மற்றும் ரவி சாஸ்திரி ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ள ராஜ்தீப், இந்த அணியின் கேப்டனாக தோனியை தேர்வு செய்துள்ளார். இந்தியாவிற்கு முதல் உலக கோப்பையை 1983ல் வென்று கொடுத்த கபில் தேவ் இந்த அணியில் இருந்தபோதும், தோனியையே அவர் கேப்டனாக தேர்வு செய்துள்ளார். 

ஸ்பின் பவுலராக அனில் கும்ப்ளேவையும் ஃபாஸ்ட் பவுலர்களாக ஜாகீர் கான் மற்றும் பும்ராவையும் ராஜ்தீப் சர்தேசாய் தேர்வு செய்துள்ளார்.

ராஜ்தீப் சர்தேசாய் தேர்வு செய்த ஆல்டைம் இந்தியா ஒருநாள் லெவன்:

ரோஹித் சர்மா, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, முகமது அசாருதீன்/மொஹிந்தர் அமர்நாத், யுவராஜ் சிங், தோனி(கேப்டன்,விக்கெட் கீப்பர்), கபில் தேவ், ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே, ஜாகீர் கான், ஜஸ்ப்ரித் பும்ரா.