பாலியல் வன்கொடுமை வழக்கில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் முன்னாள் வீரர் குற்றவாளி என அறிவிப்பு – ஜனவரியில் தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் முன்னாள் வீரரான சந்தீப் லமிச்சனே குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜனவரி மாதம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Former Delhi Capitals Player Sandeep Lamichchane convicted sexual assault case by Kathmandu District Court rsk

பாகிஸ்தான் மற்றும் இலங்கை நடத்திய ஆசிய கோப்பை தொடரில் நேபாள் அணியில் இடம் பெற்று விளையாடியவர் சந்தீப் லமிச்சனே. பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்து ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. இதே போன்று கடந்த 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு இடம் பெற்றார்.

வெற்றியோடு ஆரம்பித்து தோல்வியோடு முடித்த இந்தியா – 2023ல் டீம் இந்தியாவின் பிளேஷ்பேக்!

ஆனால், 2018 ஆம் ஆண்டில் 3 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளும், 2019 ஆம் ஆண்டுகளில் 6 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளும் கைப்பற்றினார். அதன் பிறகு ஐபிஎல் தொடரில் இடம் பெறவில்லை. நேபாள் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் சந்தீப் இதுவரையில் 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 112 விக்கெட்டுகளையும், 52 டி20 போட்டிகளில் விளையாடி 98 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சந்தீப் லமிச்சனே காத்மண்டுவில் உள்ள ஹோட்டலில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் கூறப்பட்டபோது சந்தீப் லமிச்சனே வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அதன் பிறகு அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பு தெரிவித்தார்.

கிரிக்கெட் வரலாற்றில் 7 வெவ்வேறு ஆண்டுகளில் 2000க்கும் அதிகமாக ரன்கள் குவித்து விராட் கோலி சாதனை!

பாலியல் புகார் கூறப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு, சில மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எனினும் நேபாள் அணியில் இடம் பெற்று விளையாடி வந்தார். இந்த நிலையில் தான் அவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது. மேலும், வரும் ஜனவரி மாதம் அவருக்கான தண்டனை விவரங்கள் குறித்து அறிவிக்கபட உள்ளது.  

ஒரு தகப்பனுக்கு தன் மகனை பார்க்காமல் இருப்பதைக் காட்டிலும் வேதனை எதுவும் இல்லை – அக்‌ஷய் குமார்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios