Asianet News TamilAsianet News Tamil

ரோஹித்துக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டன் அவர்தான்..! ராகுல்லாம் இல்ல.. முன்னாள் வீரர் அதிரடி

ரோஹித் சர்மாவுக்கு அடுத்த இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தான் என்று முன்னாள் வீரர் அருண் லால் கருத்து கூறியுள்ளார்.

former cricketer arun lal opines rishabh pant will be the next India captain after rohit sharma
Author
Chennai, First Published Jul 19, 2022, 9:56 PM IST

இந்திய அணியின் கேப்டன்சி தோனியிடமிருந்து கோலி, கோலியிடமிருந்து இப்போது ரோஹித் சர்மாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா மிகச்சிறந்த கேப்டன். இந்திய அணியை தொடர்ச்சியாக வெற்றிப்பாதையில் பயணிக்க செய்துகொண்டிருக்கிறார்.

ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்றுவருகிறது.  ரோஹித்துக்கு துணை கேப்டன் கேஎல் ராகுல் தான். ஆனால் கேஎல் ராகுல் காயம் காரணமாக சமீபமாக நடந்த தொடர்களில் ஆடவில்லை.

ரோஹித்துக்கு அடுத்த கேப்டன் யார் என்ற விவாதம் இப்போதே தொடங்கிவிட்டது. கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் கேப்டனுக்கான போட்டியில் உள்ளனர். ஹர்திக் பாண்டியா ஐபிஎல்லில் மிகச்சிறப்பாக கேப்டன்சி செய்து அறிமுக சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

ரிஷப் பண்ட்டும் ஐபிஎல்லில் சிறப்பாக கேப்டன்சி செய்ததுடன், அவ்வப்போது ரோஹித் ஆடாத தொடர்களில் இந்திய அணியையும் வழிநடத்திவருகிறார். எனவே அடுத்த கேப்டன் யார் என்பது பெரும் விவாதமாக உள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இக்கட்டான சூழலில் களமிறங்கி, முதிர்ச்சியுடன் நிதானமாக பேட்டிங் ஆடி சதமடித்து, கடைசி வரை களத்தில் நின்று போட்டியை வெற்றிகரமாக ரிஷப் பண்ட் முடித்து கொடுக்க, அவரது முதிர்ச்சியான ஆட்டத்தை கண்டபிறகு அவரே கேப்டனாகலாம் என்று எண்ணத்தை தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் விதைத்துள்ளார் ரிஷப் பண்ட்.

அதைத்தான் முன்னாள் வீரர் அருண் லாலும் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அருண் லால், கண்டிப்பாக ரிஷப் பண்ட் தான், ரோஹித் சர்மாவுக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டன். ஒரு கேப்டனாக நியமிக்கப்படுபவர், அணியின் டாப் 3 வீரர்களில் ஒருவராக இருக்க வேண்டும். ரிஷப் பண்ட் பயமே இல்லாமல் துணிச்சலாக ஆடக்கூடியவர். மேலும் அழுத்தமான சூழல்களையும் சிறப்பாக கையாள்கிறார். இந்தமாதிரியான வீரர் தான் சிறந்த கேப்டனாக திகழமுடியும். ரிஷப் பண்ட் மாதிரியான ஆக்ரோஷமான வெற்றி வேட்கை மிகுந்த வீரரை கேப்டனாக நியமிப்பது இந்திய அணிக்கு நல்லது என்று அருண் லால் கருத்து கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios