ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் பட்டிலியை உறுதி செய்வதற்கான கடைசி லீக் 2 தொடர் நடக்க இருக்கிறது.
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பையை இந்தியா நடத்துகின்றது. வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. அடுத்தடுத்து 3 முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடக்க உள்ள நிலையில், இந்த தொடரின் முடிவுகள் இறுதிப் பட்டியலை முடிவு செய்யும். காத்மண்டுவில் முதல் முத்தரப்பு தொடர் நடக்கிறது. இதற்காக நமீபியாவும், ஸ்காட்லாந்தும் நேபாள் நாட்டிற்கு செல்கின்றன.
ஏற்கனவே லீக் 2 புள்ளிப் பட்டியலில் நமீபியா 30 போட்டிகளில் விளையாடி 37 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது. நேபாள் நாட்டில் நடக்கும் முத்தரப்பு தொடரில் நமீபியா 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடம் பிடிக்கும். ஏற்கனவே புள்ளிப் பட்டியலில் ஓமன் 44 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் இருக்கிறது.
இதன் மூலம் ஸ்காட்லாந்து, ஓமன் மற்றும் நமீபியா ஆகிய அணிகள் முதல் 3 இடங்களை பிடித்துள்ள நிலையில், அடுத்த 2 இடங்களுக்கான போட்டியில் நேபாள் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் அணி மோதுகின்றன. நேபாள் 18 புள்ளிகளுடன் 8ஆவது இடத்திலும், ஐக்கிய அரபு நாடுகள் அணி 27 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திலும் இருக்கின்றன. நேபாள் அணிக்கு இன்னும் 12 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், ஐக்கிய அரபு நாடுகள் அணிக்கு 10 போட்டிகள் உள்ளன.
புள்ளிப் பட்டியலில் மீதமுள்ள 4 அணிகளில் லீக் 2 தொடரிலிருந்து வெளியேறாது. மாறாக சூப்பர் லீக் சுற்றில் உள்ள 10 அணிகளின் தகுதிச் சுற்றுக்கு இந்த 4 அணிகள் கடும் சவாலாக விளங்கும். இந்த அணிகள் பிளே ஆஃப் சுற்று மூலமாக குவாலிபையருக்கு முன்னேற வாய்ப்பு உண்டு. இதில், ஏற்கனவே இந்தியா உள்பட 7 அணிகள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
ஏற்கனவே சூப்பர் லீக் புள்ளிப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணி 88 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் உள்ளது. இலங்கை 77 புள்ளிகளுடன் 10ஆவது இடத்திலும், அயர்லாந்து 68 புள்ளிகளுடன் 11 ஆவது இடத்திலும் உள்ளது. இன்னும் 3 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்துவதற்கு வாய்ப்பு உள்ளது. வரும் மார்ச் மாதம் இலங்கை அணி நியூசிலாந்துக்கு பயணம் செய்துகிறது. அதே போன்று அயர்லாந்து மே மாதம் வங்கதேசத்திற்கு பயணம் செய்கிறது. அங்கு விளையாடும் போட்டிகளில் வெற்றி பெற்றால் ஏதேனும் ஒரு அணி வெற்றி பெற்றாலோ வெஸ்ட் இண்டீஸ் அணி குவாலிஃபையர் சுற்றுக்கு சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
