CSK Online Ticket: டிக்கெட் விற்பனையில் மோசடி- ஆன்லைனிலும் டிக்கெட் கிடைக்காமல் சிஎஸ்கே ரசிகர்கள் தவிப்பு!
சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் விளையாடும் முதல் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் முழுமையாக விற்று தீர்ந்து விட்டதாக காட்டப்பட்டதால் டிக்கெட் கிடைக்காமல் சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டி வரும் 22 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக சிஎஸ்கே வீரர்கள் சென்னையில் முகாமிட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாட்டு வீரர்களும் அணியுடன் இணைந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனையானது ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும், கவுண்டர் டிக்கெட் கிடையாது என்றும் ஏற்கனவே சிஎஸ்கே சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனையானது ஆன்லைனியில் தொடங்கியது. ஆனால், டிக்கெட் விற்பனை தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே டிக்கெட் விற்கப்பட்டுவிட்டதாக காட்டப்பட்ட நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், டிக்கெட் விற்பனையில் தொடர்ந்து ஊழல் மற்றும் மோசடி நடைபெற்று வருவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Scam or what ??#ChennaiSuperKings #ipltickets #CSKvRCB #CSKvsRCB #Chepauk pic.twitter.com/X3J4JfMsFd
— 𝙎𝙖𝙧𝙆𝙖𝙧𝙅𝙞🗿 (@SarKarJiiiii) March 18, 2024