சென்னை விமான நிலையம் வந்த கேகேஆர் வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

சிஎஸ்கே அணிக்கு எதிரான 22ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து கேகேஆர் வீரர்கள் அடுத்த போட்டியில் பங்கேற்க கொல்கத்தா புறப்பட்டு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

Fans welcome the KKR players who arrived at the Chennai airport after Lose against CSK rsk

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கே கே ஆர் அணிக்கு எதிரான போட்டியில் ருத்ராட்ச் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் 4ஆவது இடத்தை தக்க வைத்துக் கொண்டது. இந்த தோல்வியின் மூலம் கே கே ஆர் அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும், ஹாட்ரிக் வெற்றிக்கு பிறகு முதல் தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியைத் தொடர்ந்து வருகிற 14-ஆம் தேதி ஈடன் கார்டன் மைதானத்தில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியுடன் நடைபெற இருக்கும் 28ஆவது லீக் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தனர். சென்னை விமான நிலையம் வந்த கே கே ஆர் அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் மற்றும் அவர்களுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் இருந்தனர்.

மேலும் கே கே ஆர் அணி வீரர்கள் இண்டிகோ ஏர்லைன்ஸ் மூலம் கொல்கத்தாவிற்கு புறப்பட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios