தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ராகுல் திரிபாதி மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரையும் எடுக்காததை கண்டு ரசிகர்கள் கொந்தளித்துவருகின்றனர். 

ஐபிஎல் 15வது சீசன் வரும் 29ம் தேதி முடிவடைகிறது. ஐபிஎல் முடிந்ததும், தென்னாப்பிரிக்க அணி இந்தியாவிற்கு வந்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ஜூன் 9 முதல் 19 வரை இந்த தொடர் நடக்கவுள்ளது.

இந்த தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

இந்திய டி20 அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.

ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகிய சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதால் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டும், ஐபிஎல்லில் நன்றாக ஆடிய சீனியர் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்கும் அணியில் உள்ளனர்.

ஐபிஎல்லில் நன்றாக ஆடிய தீபக் ஹூடா, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. ஐபிஎல்லில் சரியாக ஆடாமல் சொதப்பியபோதிலும், வெங்கடேஷ் ஐயருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. ஐபிஎல்லில் கடந்த சில சீசன்களாக தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவரும் ராகுல் திரிபாதிக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சனுக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.

தொடர்ச்சியாக ஐபிஎல்லில் ஒவ்வொரு சீசனிலும் நல்ல ஸ்கோர் செய்து அபாரமாக ஆடி தனது திறமையை தொடர்ந்து நிரூபித்துவரும் ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது முன்னாள் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

ராகுல் திரிபாதி இந்திய அணியில் இடம்பெற தகுதியானவர். அவருக்கு இடம் கிடைக்காதது ஏமாற்றமளிக்கிறது என்று ஹர்பஜன் சிங் டுவிட்டரில் கருத்து கூறியுள்ளார்.

Scroll to load tweet…

ரசிகர்கள் பலரும், சஞ்சு சாம்சன் மற்றும் ராகுல் திரிபாதி ஆகிய இருவருக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்காததை கண்டு அதிருப்தியடைந்ததால் அணி தேர்வை விமர்சித்துள்ளனர். சஞ்சு சாம்சன் மற்றும் திரிபாதி ஆகிய இருவரையும் எடுக்காதது இந்திய அணிக்குத்தான் பேரிழப்பு என்று கருத்து கூறிவருகின்றனர்.

Scroll to load tweet…
Scroll to load tweet…