இன்னுமா இந்த உலகம் நம்புது – இவங்களுக்கு எதாவது செய்யணுமே பாஸ் – ஆர்சிபி மைண்ட் வாய்ஸ்!

பெங்களூரு எம் சின்னச்சுவாமி மைதானத்தில் நடந்த போட்டியில் ஆர்சிபி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்து வரும் நிலையில், ஆர்சிபி ரசிகர்கள் நாங்கள் உங்களை நம்புகிறோம் என்று பேனர் வைத்தனர்.

Fans hope, We believe in you RCB, Banner Goes viral after RCB Loss against LSG by 28 Runs Difference at M Chinnaswamy Stadium rsk

எம்.சின்னச்சுவாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 15ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு குயீண்டன் டி காக் நல்ல தொடக்கம் கொடுத்தார். அவர், 81 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசியில் வந்த நிக்கோலஸ் பூரன் 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்துக் கொடுக்க லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 181 ரன்கள் குவித்தது.

பின்னர், 182 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட ஆர்சிபி விளையாடியது. இதில், தனது 100ஆவது டி20 போட்டியில் விளையாடிய விராட் கோலி 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 22 ரன்கள் எடுத்து, தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் ஓவரில் ஆட்டமிழந்தார். இது அவரது முதல் ஐபிஎல் விக்கெட். இவரைத் தொடர்ந்து கேப்டன் பாப் டூப்ளெசிஸ் 19 ரன்களில் ரன் அவுட்டானார்.

அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சிறந்த ஆல்ரவுண்டர் என்று அணியில் வாங்கப்பட்ட கேமரூன் க்ரீன் 9 ரன்களில் நடையை கட்டினார். ஒரு கட்டத்தில் ஆர்சிபி 7.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் எடுத்திருந்தது. ஆர்சிபி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது ஆர்சிபி ரசிகர்களது ரியாக்‌ஷன் மாறிக் கொண்டே சென்றது. விக்கெட் கீப்பர் அனுஜ் ராவத் 11 ரன்னிலும், ரஜத் படிதார் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அவ்வளவு தான் ஆர்சிபி என்று எண்ணிக் கொண்டிருந்த போது மஹிபால் லோம்ரார் வந்து 3 பவுண்டரி, 3 சிக்ஸர் விளாசவே ஆட்டம் சூடு பிடித்தது. எனினும், அவர் 33 ரன்களில் ஆட்டமிழக்க மெல்ல மெல்ல லக்னோவின் பக்கம் வெற்றி திரும்பியது.

தினேஷ் கார்த்திக்கும் 4 ரன்களில் நடையை கட்ட, கடைசியில் வந்த முகமது சிராஜ் அடுத்தடுத்து 2 சிக்ஸர் விளாசி ஆர்சிபி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார். இறுதியில் ஆர்சிபி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மேலு, இந்த சீசனில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த முதல் அணி என்ற மோசமான சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது.

இந்த நிலையில், தான் நாங்கள் உங்களை நம்புகிறோம் என்று ஆர்சிபி ரசிகர்கள் ஆர்சிபி கொடியை பறக்கவிட்டு ஆர்சிபி அணிக்கு தெரியப்படுத்தினர். எனினும் இந்த மைதானத்தில் ஆர்சிபி தொடர்ந்து 2ஆவது முறையாக தோல்வியை தழுவியது. ஆர்சிபி விளையாடிய 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பிடித்துள்ளது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios