டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனை எடுக்காததை ரசிகர்கள் டுவிட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளனர். 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், ஒவ்வொரு அணியாக அறிவிக்கப்பட்டுவருகிறது.

அந்தவகையில், இன்று ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியில் ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப், தினேஷ் கார்த்திக் ஆகிய வழக்கமான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஸ்பின்னர்களாக அஷ்வின், அக்ஸர் படேல், சாஹல் ஆகிய மூவரும் எடுக்கப்பட்டுள்ளனர். தீபக் சாஹரும் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க - T20 World Cup: இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட முகமது ஷமி! ஷமியின் அருமை தெரிந்தும் கழட்டிவிட இதுதான் காரணம்

ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்ஷல் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய நால்வரும் எடுக்கப்பட்டுள்ளனர். முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர், ரவி பிஷ்னோய் ஆகிய நால்வரும் ஸ்டாண்ட்பை வீரர்களாக எடுக்கப்பட்டுள்ளனர்.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

ஸ்டாண்ட்பை வீரர்கள் - முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.

இதையும் படிங்க - ENG vs SA டெஸ்ட் தொடருக்கு பின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்

ஷமியை இந்திய மெயின் அணியில் தேர்வு செய்யாதது, சஞ்சு சாம்சனை இந்திய அணியில் தேர்வு செய்யாதது ஆகியவை ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சஞ்சு சாம்சனை தேர்வு செய்யாததால் ரசிகர்கள் கடுப்படைந்துள்ளனர்.

டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து சொதப்பிவரும் ரிஷப் பண்ட்டை எடுத்துவிட்டு, சஞ்சு சாம்சனை தொடர்ச்சியாக ஒதுக்குவதால் பிசிசிஐயை கடுமையாக சாடியுள்ளனர் ரசிகர்கள். டுவிட்டரில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றனர்.

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…