கட்டிப்பிடிக்க வந்த ரசிகர் – ஒரு நிமிடம் பயந்த ஓடிய ரோகித் சர்மா: வைரலாகும் வீடியோ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பீல்டிங்கில் நின்றிருந்த ரோகித் சர்மாவை கட்டிப்பிடிக்க ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் ஓடி வந்து அவரை கட்டிப்பிடித்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

Fan who entered into Wankhede Stadium and Hugged Rohit Sharma and Ishan Kishan During MI vs RR in 14th IPL 2024 Match rsk

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 14ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆர் ஆர் அணி முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 34 ரன்னும், திலக் வர்மா 32 ரன்னும் எடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பவுலிங்கைப் பொறுத்த வரையில் டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சஹால் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டும், ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் எளிய இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர் யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில் குவெனா மபாகா பந்தில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக மபாகா ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றினார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 12 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 16 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி வரை அதிரடியாக விளையாடிய ரியான் பராக் அரைசதம் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலமாக விளையாடிய 3 போட்டியிலும் ராஜஸ்தான் வெற்றி பெற்று ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 3 போட்டியிலும் தோல்வி அடைந்து ஹாட்ரிக் தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது.

இந்தப் போட்டியின் போது ஸ்லிப்பில் நின்றிருந்த ரோகித் சர்மாவை கட்டிப்பிடிக்க மைதானத்திற்குள் ரசிகர் ஓடி வந்துள்ளார். அவரைப் பார்த்து ஒரு நிமிடம் பயந்த ரோகித் சர்மா, அவருக்கு கை கொடுத்துள்ளார். அதன் பிறகு இஷான் கிஷானை கட்டிப்பிடித்து அவருக்கு கை கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரசிகரை பாதுகாப்பாளர்கள் தனியாக அழைத்துச் சென்றுள்ளனர்.

இதற்கு முன்னதாக பெங்களூருவில் நடந்த போட்டியின் போது விராட் கோலி காலில் விழுந்த ரசிகரை தனியாக அழைத்துச் சென்ற பாதுகாப்பாளர்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்த வீடியோ வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios