பாகிஸ்தானில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கிரிக்கெட் போட்டி நடந்துவருகிறது. இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 

முதல் ஒருநாள் போட்டி மழையால் டாஸ் கூட போடப்படாமல் ரத்தான நிலையில், இரண்டாவது போட்டி கராச்சியில் நடந்துவருகிறது. நீண்ட இடைவெளிக்கு பின் சொந்த மண்ணில் கிரிக்கெட் போட்டியை காண ஆவலாக இருந்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு முதல் போட்டி நடக்காதது பெரும் ஏமாற்றமாக இருந்தது. 

இந்நிலையில், இரண்டாவது போட்டி இந்திய நேரப்படி 3.30 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர்.

 

தொடக்க வீரர்கள் ஃபகார் ஜமானும் இமாம் உல் ஹக்கும் நன்றாக தொடங்கினர். ஃபகார் ஜமான் முதல் ஓவரை பொறுமையாக எதிர்கொண்ட நிலையில், அதன்பின்னர் அடித்து ஆட தொடங்கினார். இமாம் உல் ஹக்கும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து நன்றாக ஆடினார். ஃபகாரும் இமாமும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தனர். 

இமாம் உல் ஹக் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஃபகார் ஜமானுடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஃபகார் ஜமான் அரைசதம் அடித்தார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஃபகார் ஜமானை 21வது ஓவரில் 54 ரன்களுக்கு வீழ்த்தினார் ஹசரங்கா. 21 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை கடந்து பாகிஸ்தான் அணி ஆடிவருகிறது. ஃபகார் ஜமான் அவுட்டானதை அடுத்து பாபர் அசாமுடன் ஹாரிஸ் சொஹைல் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.