இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி வென்றது. இதையடுத்து ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்தது இலங்கை அணி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில், ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்தை 2வது ஒருநாள் போட்டியில் இன்று எதிர்கொண்டுள்ளது இலங்கை அணி. 

லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. கடந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராக இறக்கப்பட்ட லிவிங்ஸ்டோன் நீக்கப்பட்டு, இந்த போட்டியில் ஜேசன் ராய் தொடக்க வீரராக ஆடுகிறார்.

இங்கிலாந்து அணி:

ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய், ஜோ ரூட், ஒயின் மோர்கன்(கேப்டன்), சாம் பில்லிங்ஸ்(விக்கெட் கீப்பர்), மொயின் அலி, சாம் கரன், டேவிட் வில்லி, டாம் கரன், அடில் ரஷீத், மார்க் உட்.

இலங்கை அணி:

குசால் பெரேரா(கேப்டன், விக்கெட் கீப்பர்), நிசாங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, தனஞ்செயா டி சில்வா, வஹிந்து ஹசரங்கா, தசுன் ஷனாகா, சாரித் அசலங்கா, சாமிகா கருணரத்னே, பினுரா ஃபெர்னாண்டோ, துஷ்மந்தா சமீரா, பிரவீன் ஜெயவிக்ரமா.