தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. எனவே தொடர் 1-1 என சமனடைந்துள்ளது.

இந்த தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது. தென்னாப்பிரிக்க அணி 2வது டெஸ்ட்டில் தோற்பதற்கு முன், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் தான் இருந்தது. அந்த தோல்விக்கு பின் தான் 2ம் இடத்திற்கு பின் தங்கியது.

இதையும் படிங்க - IND vs AFG: உப்புச்சப்பில்லாத மொக்கை மேட்ச்சுக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

எனவே இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறலாம். முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் தான் ஃபைனலில் மோதமுடியும் என்பதால், ஃபைனல் வாய்ப்பை வலுப்படுத்த தென்னாப்பிரிக்க அணிக்கு இது முக்கியமான போட்டி ஆகும்.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்து அணி:

அலெக்ஸ் லீஸ், ஜாக் க்ராவ்லி, ஆலி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), ஸ்டூவர்ட் பிராட், ஆலி ராபின்சன், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இதையும் படிங்க - ஸ்டேடியத்தில் செம சண்டை.. அடித்துகொண்ட ஆஃப்கான் - பாக்., ரசிகர்கள்..! வைரல் வீடியோ

தென்னாப்பிரிக்க அணி:

டீன் எல்கர் (கேப்டன்), சாரெல் எர்வீ, கீகன் பீட்டர்சன், ரியான் ரிக்கல்டான், கயா ஜாண்டோ, கைல் வெரெய்ன் (விக்கெட் கீப்பர்), வியான் முல்டர், மார்கோ யான்சென், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா.