Asianet News TamilAsianet News Tamil

#ENGvsPAK முதல் ஒருநாள் போட்டி: புதுமுகங்களுடன் களமிறங்கியுள்ள இங்கிலாந்து..! டாஸ் ரிப்போர்ட்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

england win toss opt to field against pakistan in first odi
Author
Cardiff, First Published Jul 8, 2021, 5:21 PM IST

பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. முதல் ஒருநாள் போட்டி கார்டிஃபில் இன்று நடக்கிறது. 

இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டிருந்த ஒயின் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் 3 வீரர்கள், 4 அணி நிர்வாகத்தினர் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அந்த அணி முழுவதுமாக மாற்றப்பட்டு, பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முற்றிலுமாக வேறு அணி அறிவிக்கப்பட்டது.

england win toss opt to field against pakistan in first odi

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் போட்டி கார்டிஃபில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பல ஜாக் க்ராவ்லி, லெவிஸ் க்ரெகோரி உள்ளிட்ட வீரர்கள்  ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளனர். 

இங்கிலாந்து அணி:

ஃப்லிப் சால்ட், டேவிட் மலான், ஜாக் க்ராவ்லி, ஜேம்ஸ் வின்ஸ், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜான் சிம்ப்சன்(விக்கெட் கீப்பர்), லெவிஸ் க்ரெகோரி, க்ரைக் ஓவர்டன், ப்ரைடன் கார்ஸ், சாகிப் மஹ்மூத், மேத்யூ பார்கின்சன்.

பாகிஸ்தான் அணி:

இமாம் உல் ஹக், ஃபகர் ஜமான், பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), சௌத் ஷகீல், சொஹைப் மக்சூத், ஷதாப் கான், ஃபஹீம் அஷ்ரஃப், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரௌஃப்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios