டி20 உலக கோப்பை: அரையிறுதியில் டாஸ் வென்ற இங்கிலாந்து..! சீனியர் வீரரை தூக்கி எறிந்த இந்திய அணி

டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
 

england win toss opt to field against india in semi final match in t20 world cup

டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் முன்னேறிய நிலையில், முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது அரையிறுதி போட்டி இன்று அடிலெய்டில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் ஆடவில்லை. விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் ஆடுகிறார். இதுதான் பெரிய கேள்வியாக இருந்தது. இந்நிலையில், தினேஷ் கார்த்திக்கை உட்காரவைத்துவிட்டு, ரிஷப் பண்ட்டுக்கு ஆடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

T20 WC: ஒற்றை கேட்ச்சால் மொத்த மேட்ச்சும் போச்சு..! மோசமான ஃபீல்டிங்கால் அரையிறுதியில் தோற்ற நியூசிலாந்து

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

இங்கிலாந்து அணியில் காயமடைந்த டேவிட் மலானுக்கு பதிலாக ஃபிலிப் சால்ட் ஆடுகிறார். மார்க் உட்டுக்கு பதிலாக கிறிஸ் ஜோர்டான் ஆடுகிறார்.

T20 WC: ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இருவரில் அரையிறுதியில் ஆடப்போகும் விக்கெட் கீப்பர் யார்? ரோஹித் பதில்

இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர், கேப்டன்), அலெக்ஸ் ஹேல்ஸ், ஃபிலிப் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios