Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND 4வது டெஸ்ட் டாஸ் ரிப்போர்ட்: இந்திய அணியில் 2 மாற்றங்கள்..! அஷ்வினுக்கு மீண்டும் அணியில் இடம் இல்லை

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
 

england win toss opt to field against india in fourth test
Author
Oval, First Published Sep 2, 2021, 3:18 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என சமனில் உள்ளது. 

இந்நிலையில் 4வது டெஸ்ட் போட்டி இன்று லண்டன் ஓவலில் தொடங்கியது. இந்திய நேரப்படி 3.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 3 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தனக்கு 2வது குழந்தை பிறக்கவுள்ளதால் இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகிய ஜோஸ் பட்லருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஆலி போப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பட்லர் விலகியதால் ஜானி பேர்ஸ்டோ விக்கெட் கீப்பிங் செய்வார். ஆல்ரவுண்டர் சாம் கரனுக்கு பதிலாக சீனியர் ஆல்ரவுண்டரான கிறிஸ் வோக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத், டேவிட் மலான், ஜோ ரூட்(கேப்டன்), ஆலி போப், ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், கிரைக் ஓவர்டன், ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இந்திய அணியிலும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஃபாஸ்ட் பவுலர்கள் இஷாந்த் சர்மா மற்றும் முகமது ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஷர்துல் தாகூர் நன்றாக ஸ்விங் செய்யக்கூடிய பவுலர் மட்டுமல்லாது, நல்ல பேட்ஸ்மேனும் கூட. எனவே தாகூரை சேர்த்ததன் மூலம், பேட்டிங் டெப்த் அதிகரித்துள்ளது.

ஆனால் இந்த போட்டியிலாவது இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு இந்த போட்டிக்கான அணியிலும் இடம் கிடைக்கவில்லை.

இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், புஜாரா, கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios