Asianet News Tamil

#ENGvsNZ 2வது டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கி., பேட்டிங்..! பாதி அணியை கொத்தாக மாற்றிய நியூசிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் நியூசிலாந்து அணியில் 6 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

england win toss opt to bat against new zealand in second test
Author
Edgbaston, First Published Jun 10, 2021, 3:29 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் இன்று தொடங்கியது. எட்ஜ்பாஸ்டனில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆலி ராபின்சன் நீக்கப்பட்டதையடுத்து, ஆலி ஸ்டோன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி, ஜாக் க்ராவ்லி, ஜோ ரூட்(கேப்டன்), ஆலி போப், டேனியல் லாரன்ஸ், ஜேம்ஸ் பிரேஸி, மார்க் உட், ஆலி ஸ்டோன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

நியூசிலாந்து அணியில் 6 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முழங்கையில் காயமடைந்த கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு பதிலாக வில் யங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வில்லியம்சன் ஆடாததால் டாம் லேதம் நியூசிலாந்து அணியை வழிநடத்துகிறார்.

டிம் சௌதி, கைல் ஜாமிசன், மிட்செல் சாண்ட்னெர் ஆகிய மூவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. வரும் 18-22ல் நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடுவதற்காக அவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டது. அவர்களுக்காக மாட் ஹென்ரி, டிரெண்ட் போல்ட் மற்றும் அஜாஸ் படேல் ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டனர்.

காயம் காரணமாக விலகிய விக்கெட் கீப்பர் வாட்லிங்கிற்கு பதிலாக டாம் பிளண்டலும், ஆல்ரவுண்டர் காலின் டி கிராண்ட் ஹோமிற்கு பதிலாக டேரைல் மிட்செலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து அணி:

டாம் லேதம்(கேப்டன்), டெவான் கான்வே, வில் யங், ரோஸ் டெய்லர், ஹென்ரி நிகோல்ஸ், டாம் பிளண்டல், டேரைல் மிட்செல், நீல் வாக்னர், மாட் ஹென்ரி, அஜாஸ் படேல், டிரெண்ட் போல்ட்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios