Asianet News TamilAsianet News Tamil

ENG vs SA: தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட்.. இங்கிலாந்து அணி அறிவிப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

england team playing eleven announced for the last test against south africa
Author
First Published Sep 1, 2022, 3:34 PM IST

தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2வது டெஸ்ட்டில் அதேபோலவே இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தென்னாப்பிரிக்காவுக்கு தரமான பதிலடி கொடுத்தது, பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி.

இதையும் படிங்க - ஹர்திக் பாண்டியா செம பிளேயர்; அதுல எந்த டவுட்டும் இல்ல! ஆனால் அந்த ஒரு விஷயம் தான் கவலையா இருக்கு - கபில் தேவ்

இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருப்பதால் 1-1 என டெஸ்ட் தொடர் சமனில் உள்ளது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை வெல்லும். தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 8ம் தேதி லண்டன் கெனிங்டன் ஓவலில் தொடங்குகிறது.

இந்த தொடரின் முடிவை தீர்மானிப்பது மட்டுமல்லாது, தென்னாப்பிரிக்க அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறுவதை முடிவு செய்யும் முக்கியமான போட்டியாக கூட இது அமையும். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் தோற்றதால் 2ம் இடத்திற்கு பின் தங்கியது. எனவே மேலும் ஒரு தோல்வியை அடைந்தால், அது அந்த அணிக்கு பின்னடைவாக அமையும்.

ஆனால் புள்ளி பட்டியலில் ஏழாமிடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு இழப்பதற்கு எதுவுமில்லை. எனவே கடைசி டெஸ்ட் போட்டி அனைத்து வகையிலும் முக்கியமான போட்டி. அந்த டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு..! மும்பை இந்தியன்ஸ் வீரர் சர்ப்ரைஸ் தேர்வு

இங்கிலாந்து அணி:

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் லீஸ், ஜாக் க்ராவ்லி, ஜோ ரூட், ஆலி போப், ஜானி பேர்ஸ்டோ, பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜாக் லீச், ஹாரி ப்ரூக், ஸ்டூவர்ட் பிராட், மேத்யூ பாட்ஸ், ஆலி ராபின்சன், க்ரைக் ஓவர்டன்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios