நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாளை(ஜூன்2) லண்டன் லார்ட்ஸில் தொடங்குகிறது.

பென் ஸ்டோக்ஸின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி ஆடும் முதல் டெஸ்ட் தொடர் இது. இந்ததொடரிலிருந்து இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் செயல்படவுள்ளார்.

புதிய தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழான இங்கிலாந்து அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் கேப்டன்சியில் தொடர் தோல்விகளை தழுவிவந்த நிலையில், பென் ஸ்டோக்ஸின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி என்னை செய்யப்போகிறது என்பது ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இந்த டெஸ்ட் தொடர் இங்கிலாந்து அணிக்கும் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் ஆகியோருக்கும் முக்கியமான தொடர். 

நாளை(ஜூன்2) லண்டன் லார்ட்ஸில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கும் நிலையில், இந்த போட்டிக்கான பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் சீனியர் ஃபாஸ்ட் பவுலர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவருக்குமே இடம் கிடைத்துள்ளது.

தொடக்க வீரர்களாக ஜாக் க்ராவ்லி மற்றும் அலெக்ஸ் லீஸ் ஆடவுள்ளனர். விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ். மிடில் ஆர்டர் ஆலி போப், ரூட், பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ் ஆகியோரும், ஸ்பின்னராக ஜாக் லீச்சும் எடுக்கப்பட்டுள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன்:

ஜாக் க்ராவ்லி, அலெக்ஸ் லீஸ், ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), பென் ஃபோக்ஸ்(விக்கெட் கீப்பர்), மேத்யூ பாட்ஸ், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட்.