டி20 உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் உள்ளது. டி20 உலக கோப்பைக்கான நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒயின் மோர்கன் தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி:

ஒயின் மோர்கன்(கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், டைமல் மில்ஸ், அடில் ரஷீத், ஜேசன் ராய், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்.

ரிசர்வ் வீரர்கள் - டாம் கரன், லியாம் டாவ்சன், ஜேம்ஸ் வின்ஸ்.