வெஸ்ட்  இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மூன்றரை மாதங்களாக எந்த கிரிக்கெட் போட்டியும் நடக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு, இங்கிலாந்தும் வெஸ்ட் இண்டீஸும் கிரிக்கெட் தொடரில் ஆடவுள்ளன.

வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. வரும் 8ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. முதல் போட்டி சவுத்தாம்ப்டனிலும், 16ம் தேதி தொடங்கும் 2வது டெஸ்ட் மற்றும் 24ம் தேதி தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியும் மான்செஸ்டரிலும் நடக்கவுள்ளன. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு, கிரிக்கெட் போட்டிகள் தொடங்கவுள்ளதால் ரசிகர்களும் உற்சாகமாக உள்ளனர். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ரூட் ஆடவில்லை. அதனால் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக செயல்படவுள்ளார். 

இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியை பார்ப்போம்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான 13 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி:

பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், டோமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), ஜாக் க்ராவ்லி, ஜோ டென்லி, ஓலி போப், டாம் சிப்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்.