Asianet News TamilAsianet News Tamil

7 பேருக்கு கொரோனா உறுதியானதன் விளைவு - மொத்த அணியையும் கொத்தா மாற்றிய இங்கிலாந்து! புதிய அணி அறிவிப்பு

இங்கிலாந்து வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கான இங்கிலாந்து அணி மொத்தமாக மாற்றப்பட்டு புதிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

england new squad announced for pakistan series after 7 persons tested corona positive
Author
England, First Published Jul 6, 2021, 8:07 PM IST

3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது பாகிஸ்தான் அணி. முதலில் ஒருநாள் தொடரும், பின்னர் டி20 தொடரும் நடக்கவுள்ளது. 

வரும் 8ம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ள நிலையில், இங்கிலாந்து அணியை சேர்ந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 3 வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதன் விளைவாக ஒயின் மோர்கன் தலைமையிலான அந்த அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, மொத்த அணியும் மாற்றப்பட்டு, அந்த அணியில் இடம்பெறாத வீரர்களை கொண்ட புதிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையில் 18 வீரர்களை கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி:

பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜேக் பால், டேனி ப்ரிக்ஸ், ப்ரைடான் கார்ஸ், ஜாக் க்ராவ்லி, பென் டக்கெட், லெவிஸ் க்ரெகோரி, டாம் ஹெல்ம், வில் ஜாக்ஸ், டான் லாரன்ஸ், சாகிப் மஹ்மூத், டேவிட் மலான், க்ரைக் ஓவர்டன், மேட் பார்கின்சன், டேவிட் பெய்ன், ஃபில் சால்ட், ஜான் சிம்ப்சன், ஜேம்ஸ் வின்ஸ்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios