Asianet News TamilAsianet News Tamil

படுமோசமா சொதப்பும் இங்கிலாந்து அணி.. அசத்தும் ஆஸ்திரேலிய பவுலர்கள்

இரண்டாம் நாள் ஆட்டமான இன்று, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஜேசன் ராய், இந்த முறையும் ஏமாற்றமளித்தார். ஜேசன் ராய் 9 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை வீழ்த்திய ஹேசில்வுட், ரூட்டையும் டக் அவுட்டாக்கி அனுப்பினார். 

england lost 3 wickets earlier in first innings of ashes third test
Author
England, First Published Aug 23, 2019, 4:35 PM IST

ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டி லீட்ஸில் நடந்துவருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மழையின் குறுக்கீட்டால் டிராவில் முடிந்தது. 

மூன்றாவது போட்டி லீட்ஸில் நேற்று தொடங்கியது. நேற்றும் மழையால் ஆட்டம் தாமதமாகவே தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

ஆஸ்திரேலிய அணியில் பான்கிராஃப்ட் நீக்கப்பட்டு வார்னருடன் மார்கஸ் ஹாரிஸ் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். ஹாரிஸ் 8 ரன்களிலேயே ஆட்டமிழந்துவிட்டார். அதன்பின்னர் உஸ்மான் கவாஜாவும் 8 ரன்களில் ஆட்டமிழக்க, வார்னரும் லபுஷேனுமும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். இருவருமே அரைசதம் அடித்தனர். 

england lost 3 wickets earlier in first innings of ashes third test

இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 111 ரன்களை சேர்த்தனர். அரைசதம் அடித்த வார்னரை 61 ரன்களில் ஆர்ச்சர் வீழ்த்தினார். அதன்பின்னர் எந்த வீரருமே சரியாக ஆடவில்லை. ஒருமுனையில் லபுஷேன் களத்தில் நங்கூரமிட்டு நிற்க, மறுமுனையில் டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட், கேப்டன் டிம் பெய்ன், பேட்டின்சன், கம்மின்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இவர்களில் ஹெட், வேட், கம்மின்ஸ் ஆகிய மூவரும் டக் அவுட். 

தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்த நிலையில், பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த லபுஷேன் 71 ரன்களில் 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டாக நாதன் லயன் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்டத்தில் 52.1 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியின் சார்பில் ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

england lost 3 wickets earlier in first innings of ashes third test

இரண்டாம் நாள் ஆட்டமான இன்று, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஜேசன் ராய், இந்த முறையும் ஏமாற்றமளித்தார். ஜேசன் ராய் 9 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை வீழ்த்திய ஹேசில்வுட், ரூட்டையும் டக் அவுட்டாக்கி அனுப்பினார். அதன்பின்னர் பர்ன்ஸுடன் டென்லி ஜோடி சேர்ந்தார். பர்ன்ஸும் 9 ரன்களில் கம்மின்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். 

இங்கிலாந்து அணி, 20 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதையடுத்து டென்லியுடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். இந்த ஜோடி பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios