Asianet News TamilAsianet News Tamil

நீங்க இல்லாம வேலைக்கு ஆகாது.. அடுத்த மேட்ச்ல ஆடணும் வேகமா வாங்க..! ஆல்ரவுண்டரை அழைக்கும் இங்கிலாந்து அணி

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆட ஸ்பின் ஆல்ரவுண்டரை அழைக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் அணி.
 

england cricket recall moeen ali for the second test against india
Author
London, First Published Aug 10, 2021, 3:29 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்தது. இந்திய அணி ஜெயித்திருக்க வேண்டிய அந்த போட்டியில் கடைசி நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டதால் போட்டி டிரா என்று அறிவிக்கப்பட்டது. 

கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கையில் 9 விக்கெட்டுகள் இருந்த நிலையில், வெறும் 157 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவைப்பட்டது. மழை குறுக்கிடவில்லை என்றால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். 

அந்த போட்டி முழுவதுமே இந்திய அணியின் கை தான் ஓங்கியிருந்தது. ஜோ ரூட்டின் பேட்டிங்கை தவிர அந்த அணிக்கு எதுவுமே பாசிட்டிவாக அமையவில்லை. ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆடாதது அந்த அணியின் காம்பினேஷனையே முழுவதுமாக பாதித்துள்ளது. கிறிஸ் வோக்ஸும் காயத்தால் ஆடமுடியாத சூழலில் இருக்கிறார். ஆல்ரவுண்டர்கள் இல்லாதது அந்த அணிக்கு பாதிப்பாக அமைந்துள்ளது.

கடந்த போட்டியில் தொழில்முறை ஸ்பின்னர் ஒருவர் இல்லாமலேயே ஆடியது இங்கிலாந்து அணி. இந்நிலையில், பேட்டிங் ஆர்டரிலும் பாதிப்பு ஏற்பட்டிராத வகையில், ஒரு பவுலரும் தேவை என்ற நிலையில், ஸ்பின் ஆல்ரவுண்டர் மொயின் அலியை நாடியுள்ளது இங்கிலாந்து அணி. 

இந்தியாவுக்கு எதிராக லண்டன் லார்ட்ஸில் நடக்கவுள்ள 2வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இணைய மொயின் அலிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். எனவே அடுத்த போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவனில் மொயின் அலி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொயின் அலி பவுலிங்கில் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடியவர் மட்டுமல்லாது, பேட்டிங்கிலும் சிறந்த பங்களிப்பு செய்யக்கூடியவர். எனவே அவரது சேர்ப்பு, இங்கிலாந்து அணி காம்பினேஷனுக்கு வலுசேர்க்கும்.

இங்கிலாந்தில் நடந்த 100 கிரிக்கெட் தொடரின் ஒரு போட்டியில் 23 பந்தில் அரைசதம் அடித்து நல்ல ஃபார்மிலும் உள்ளார் மொயின். அவர் கடைசியாக இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்காக ஆடினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios