Asianet News TamilAsianet News Tamil

Ashes Series: சிட்னி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஒரு அதிரடி மாற்றம்! சீனியர் வீரருக்கு அணியில் இடம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

England announces playing eleven for the fourth Ashes test against Australia
Author
Sydney NSW, First Published Jan 4, 2022, 5:00 PM IST

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணி அந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 3-0 என தொடரை வென்றது.

இந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் படுமோசமாக சொதப்பி படுதோல்விகளை அடைந்துவருகிறது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட்டில் 275 ரன்கள் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 3வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்திலும் படுதோல்வி அடைந்தது இங்கிலாந்து அணி.

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி ஒயிட்வாஷ் ஆகும் அபாயம் உள்ளது. ஆனால் அதை கண்டிப்பாக இங்கிலாந்து அணி விரும்பாது. இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருந்தது. இந்நிலையில், நாளை (ஜனவரி 5) சிட்னியில் தொடங்கவுள்ள 4வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.

சிட்னி டெஸ்ட் போட்டிக்கான  இங்கிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராபின்சன் நீக்கப்பட்டு சீனியர் ஃபாஸ்ட் பவுலரான ஸ்டூவர்ட் பிராட் சேர்க்கப்பட்டுள்ளார். ஆண்டர்சன் - பிராட் ஃபாஸ்ட் பவுலிங் ஜோடி உலகின் முன்னணி மிரட்டல் ஃபாஸ்ட் பவுலிங் ஜோடி. ஆனால் இந்த ஆஷஸ் தொடரில் பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட் மற்றும் மெல்போர்னில் நடந்த 3வது டெஸ்ட் ஆகிய 2 போட்டிகளிலும்  ஸ்டூவர்ட் பிராட் ஆடவில்லை. இந்நிலையில், ஆண்டர்சன் - பிராட் ஜோடி 4வது டெஸ்ட்டில் இணைந்து பந்துவீசவுள்ளது. 

இங்கிலாந்து அணி:

ஹசீப் ஹமீத், ஜாக் க்ராவ்லி, டேவிட் மலான், ஜோ ரூட் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), மார்க் உட், ஜாக் லீச், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios