Asianet News TamilAsianet News Tamil

மழையின் காரணமாக போட்டி ரத்து – டி20 உலகக் கோப்பையில் ஒரு பந்து கூட பேட்டிங் செய்யாத நடப்பு சாம்பியன்!

இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் 6ஆவது போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

England and Scotland 6th T20 World Cup 2024 Match has been abandoned due to Rain at Barbados rsk
Author
First Published Jun 5, 2024, 12:52 AM IST | Last Updated Jun 5, 2024, 12:52 AM IST

டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 6ஆவது போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் பேட்டிங் தேர்வு செய்தார். இதுவரையில் இரு அணிகளும் ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளன. முதல் முறையாக டி20 கிரிக்கெட்டிலும், உலகக் கோப்பை டி20 போட்டியிலும் விளையாடின.

ஆனால், டாஸ் போடப்பட்ட பிறகு மழையின் காரணமாக போட்டியானது தடைபட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு போட்டியானது மீண்டும் தொடங்கப்பட்டது. இதில், ஜார்ஜ் முன்சே மற்றும் மைக்கேல் ஜோன்ஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். போட்டியின் 4.3ஆவது ஓவரில் முன்சே கேட்ச் கொடுத்தார். ஆனால், அந்தப் பந்து நோபால் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். போட்டியின் 6.2ஆவது ஓவரின் போது மீண்டும் மழை குறுக்கிட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமாக பெய்த மழையின் காரணமான ஓவர்கள் குறைக்கப்பட்டது.

 

 

அதன்படி போட்டியானது 10 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. பின்னர் ஜோன்ஸ் மற்றும் முன்சே இருவரும் அதிரடி காட்டவே ஸ்காட்லாந்து 10 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணிக்கு 109 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கடைசி 2 ஓவர்களில் ஸ்காட்லாந்து 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அதனை கூடுதலாக சேர்த்து இங்கிலாந்து அணிக்கு 109 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. எனினும் மீண்டும் மழை குறுக்கிடவே வேறு வழியின்றி போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

இதுவரையில் இரு அணிகளும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்த நிலையில் முதல் முறையாக விளையாடிய டி20 போட்டியும் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஐரோப்பிய அணிகளுக்கு எதிராக கடைசியாக இங்கிலாந்து விளையாடிய 5 டி20 போட்டிகளில் 3 போட்டிகளில் இங்கிலாந்து தோல்வி அடைந்துள்ளது. மேலும், 2 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து:

ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), பிலிப் சால்ட், வில் ஜாக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி ப்ரூக், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டன், கிறிஸ் ஜோர்டன், ஜோஃபா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் உட்.

ஸ்காட்லாந்து:

ஜார்ஜ் முன்சே, மைக்கேல் ஜோன்ஸ், பிராண்டன் மெக்கல்லம், ரிச்சி, பெர்ரிங்டன் (கேப்டன்), மேத்யூ கிராஸ் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் லீஸ்க், கிறிஸ் கிரீவ்ஸ், மார்க் வாட், கிறிஸ்டோபர் சோல், பிராட் வீல், பிராட்லி குர்ரே.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios