ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டி20 தொடர் நடந்துவருகிறது. டி20 போட்டிகள் சவுத்தாம்ப்டனிலும் ஒருநாள் தொடர் மான்செஸ்டரிலும் நடக்கிறது.

முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2வது டி20 நாளை நடக்கிறது. 

இந்த போட்டியில் இரு அணிகளுமே முதல் போட்டியில் களமிறங்கிய அதே காம்பினேஷனுடன் தான் களமிறங்கும். ஏனெனில் இரண்டு அணிகளிலுமே எந்த மாற்றமும் செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை. பேட்டிங், ஆல்ரவுண்டர், ஸ்பின்னர், ஃபாஸ்ட் பவுலர் என அனைத்து விதத்திலும் இரு அணிகளும் சிறந்த காம்பினேஷனுடனே கடந்த போட்டியில் ஆடியது. அதனால் 2 அணிகளும் அதே ஆடும் லெவனுடன் தான் களம் காணும்.

உத்தேச இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மாலன், டாம் பாண்ட்டன், இயன் மோர்கன்(கேப்டன்), மொயின் அலி, கிறிஸ் ஜோர்டான், டாம் கரன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் உட்.

உத்தேச ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், அஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா.