மகளிர் பிரீமியர் லீக்கில் யுபி வாரியர்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவரில் 138 ரன்கள் அடித்து, 139 ரன்கள் என்ற இலக்கை யுபி வாரியர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது. 

மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், முதல் 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய ஆர்சிபி அணி, முதல் வெற்றியை பெறும் முனைப்பில் யுபி வாரியர்ஸை எதிர்கொண்டு ஆடிவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆர்சிபி அணி:

ஸ்மிரிதி மந்தனா (கேப்டன்), சோஃபி டிவைன், எலைஸ் பெர்ரி, ஹீதர் நைட், ரிச்சா கோஷ், எரின் பர்ன்ஸ், ஷ்ரேயங்கா பாட்டீல், கனிகா அஹுஜா, சஹானா பவார், கோமல் ஜான்ஸத், ரேணுகா சிங்.

ICC WTC ஃபைனலுக்கு முன்னேறியே தீரணும்.. நியூசி.,க்கு எதிரான டெஸ்ட்டில் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை

யுபி வாரியர்ஸ் அணி:

அலைஸா ஹீலி (கேப்டன்), ஷ்வேதா செராவத், கிரன் நவ்கிர், டாலியா மெக்ராத், தீப்தி ஷர்மா, கிரேஸ் ஹாரிஸ், தேவிகா வைத்யா, சிம்ரன் ஷேக், சோஃபி எக்லிஸ்டோன், அஞ்சலி சர்வானி, ராஜேஷ்வரி கெய்க்வாட்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவின் சாதனையை தகர்த்து முரளிதரனை விரட்டும் அஷ்வின்

முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியில் தொடக்க வீராங்கனை டிவைன் மற்றும் எலைஸ் பெர்ரி ஆகிய இருவர் மட்டுமே சிறப்பாக ஆடினார்கள். கேப்டன் ஸ்மிரிதி மந்தனா வெறும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அபாரமாக ஆடிய எலைஸ் பெர்ரி அரைசதம் அடித்தார். 39 பந்தில் பெர்ரி 52 ரன்களும், டிவைன் 24 பந்தில் 36 ரன்களும் அடித்தனர். 13வது ஓவரில் 100 ரன்களை எட்டியும் கூட மற்ற அனைவருமே சொதப்பியதால் அந்த அணி 20 ஓவரில் 138 ரன்கள் மட்டுமே அடித்தது. 139 ரன்கள் என்ற இலக்கை யுபி வாரியர்ஸ் அணி விரட்டிவருகிறது.