Asianet News TamilAsianet News Tamil

டுப்ளெசிஸின் திடீர் முடிவு.. கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன்சி பொறுப்பிலிருந்து டுப்ளெசிஸ் அதிரடியாக விலகியுள்ளார். 

du plessis steps down as south africa captain in all formats of cricket
Author
South Africa, First Published Feb 17, 2020, 2:40 PM IST

தென்னாப்பிரிக்க அணி கடந்த 2 ஆண்டுகளாக 3 ஃபார்மட்டிலும் படுமோசமாக ஆடிவருகிறது. அணியின் நட்சத்திர வீரர்களான டிவில்லியர்ஸ், ஸ்டெய்ன், ஆம்லா ஆகியோர் அடுத்தடுத்து மிகக்குறுகிய இடைவெளியில் ஓய்வு அறிவித்ததால், அனுபவம் வாய்ந்த தரமான அந்த வீரர்கள் இல்லாமல், அவர்களது இடத்தை உடனடியாக நிரப்ப முடியாமல் திணறிவரும் தென்னாப்பிரிக்க அணி, தொடர்ச்சியாக படுதோல்விகளை சந்தித்தது.

du plessis steps down as south africa captain in all formats of cricket

உலக கோப்பையில் டுப்ளெசிஸ் தலைமையில் தென்னாப்பிரிக்க அணி படுமோசமாக சொதப்பி லீக் சுற்றிலேயே வெளியேறியது. அதன்பின்னர் இந்திய அணியிடம் 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 1-1 என சமன் செய்தது. அந்த தொடரில் டி20 அணிக்கு டி காக் தான் கேப்டனாக செயல்பட்டார். 

du plessis steps down as south africa captain in all formats of cricket

தென்னாப்பிரிக்க அணியை மேம்படுத்தும் நோக்கில் புதிய தலைமை பயிற்சியாளராக மார்க் பவுச்சரும், கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் இயக்குநராக க்ரேம் ஸ்மித்தும், பேட்டிங் பயிற்சியாளராக ஜாக் காலிஸும் நியமிக்கப்பட்டனர். 

இந்த ஆண்டின் இறுதியில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், இந்த உலக கோப்பையில் இளம் துடிப்பான வீரர்களுடன் புதிய ஒரு அணியாக களமிறங்கி அசத்தும் முனைப்பில் தென்னாப்பிரிக்க அணி உள்ளது. எனவே இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான தென்னாப்பிரிக்க அணிக்கு டி காக்கை கேப்டனாக நியமித்தது கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா. டுப்ளெசிஸை ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது. 

du plessis steps down as south africa captain in all formats of cricket

டி காக்கின் தலைமையில், இங்கிலாந்தை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்க இளம் படை இரண்டு தொடர்களையும் ஜெயிக்க முடியாமல் போனாலும் கூட, அசத்தலாக ஆடினர். தென்னாப்பிரிக்க அணி டி காக்கின் தலைமையில் புதிய ரத்தம் பாய்ச்சப்பட்டு வளர்ச்சியை நோக்கி அடியை எடுத்து வைத்திருக்கும் நிலையில், டுப்ளெசிஸ் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அனைத்துவிதமான அணிகளுக்குமான கேப்டன் பொறுப்பிலிருந்து அதிரடியாக விலகியுள்ளார். 

du plessis steps down as south africa captain in all formats of cricket

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினாலும், டி காக்கின் தலைமையில் விஸ்வரூபம் எடுத்துவரும் தென்னாப்பிரிக்க அணியில் ஒரு வீரராக தான் தொடர்ந்து ஆடவுள்ளதாகவும், தனது ஆலோசனை வழங்கவிருப்பதாகவும் டுப்ளெசிஸ் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios