Asianet News TamilAsianet News Tamil

என்ன பண்றது..? இப்படி சொல்லித்தான் மனசை தேத்திக்கணும்

தாஹிர் ரிவியூ கேட்கலாமா என்பதுபோல் டி காக்கை பார்க்க, டி காக் அதற்கும் ரெஸ்பான்ஸ் செய்யவில்லை. விக்கெட் கீப்பர் டி காக் கண்டுகொள்ளாததால் கேப்டன் டுப்ளெசிஸும் வாளாவிருந்தார். 

du plessis speaks about missed to taked drs for williamson wicket
Author
England, First Published Jun 21, 2019, 10:46 AM IST

நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி நியூசிலாந்து வென்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 241 ரன்கள் மட்டுமே அடித்தது. 

242 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் முன்ரோ, கப்டில், டெய்லர், லதாம் என ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் கேப்டன் வில்லியம்சன் அவசரப்படாமல் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். ஜேம்ஸ் நீஷம் வில்லியம்சனுக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடினார். ஆனால் அவரும் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

விக்கெட்டுகள் சரிந்தாலும் வில்லியம்சன் அவசரமோ பதற்றமோ அடையவில்லை. இலக்கு ரொம்ப கடினமானது இல்லை என்பதால் போட்டியை கடைசிவரை எடுத்துச்சென்றால் வென்றுவிடலாம் என்று தெரிந்த வில்லியம்சன், நிதானமாகவும் சிறப்பாகவும் ஆடி கொஞ்சம் கொஞ்சமாக ரன்களை சேர்த்தார். நீஷமின் விக்கெட்டுக்கு பிறகு களத்திற்கு வந்த டி கிராண்ட் ஹோம் அதிரடியாக ஆடி ரன்களை குவித்து வில்லியம்சனுக்கு உறுதுணையாக இருந்தார். அரைசதம் அடித்த டி கிராண்ட் ஹோம் 47 பந்துகளில் 60 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

du plessis speaks about missed to taked drs for williamson wicket

வில்லியம்சன் ஒரு முனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. வில்லியம்சன் ஒருவரை வீழ்த்திவிட்டால் வென்றுவிடலாம் என்ற நிலையில் இருந்த தென்னாப்பிரிக்க அணி, அதற்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பை தவறவிட்டது. இம்ரான் தாஹிரிடம் பலமுறை விக்கெட்டை பறிகொடுத்திருக்கும் வில்லியம்சன், இந்தமுறை அவரது பவுலிங்கை மிக கவனமாக ஆடினார். எந்த சூழலிலும் தாஹிரின் பந்தை அடித்து ஆட முயற்சிக்கவில்லை. 

ஆனாலும் தாஹிரின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் சிக்கிவிட்டார் வில்லியம்சன். நியூசிலாந்து இன்னிங்ஸின் 38வது ஓவரை தனது கடைசி ஓவராக வீசினார் தாஹிர். அந்த ஓவரின் கடைசி பந்து வில்லியம்சன் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது. அதை டி காக் எந்த தவறும் செய்யாமல் கேட்ச் பிடித்தார். தாஹிர் பயங்கரமாக அப்பீல் செய்ய, டி காக் பெரியளவில் கண்டுக்காமல் இருந்தார். 

du plessis speaks about missed to taked drs for williamson wicket

தாஹிர் ரிவியூ கேட்கலாமா என்பதுபோல் டி காக்கை பார்க்க, டி காக் அதற்கும் ரெஸ்பான்ஸ் செய்யவில்லை. விக்கெட் கீப்பர் டி காக் கண்டுகொள்ளாததால் கேப்டன் டுப்ளெசிஸும் வாளாவிருந்தார். அதனால் ரிவியூ கேட்கவில்லை. அதன்பின்னர் ரிப்ளேவில் அது அவுட்டுதான் என்பது தெரிந்தது. அந்த தருணத்தில் வில்லியம்சன் 70 ரன்களை கடந்து ஆடிக்கொண்டிருந்தார்.

அந்த ரிவியூவை எடுத்திருந்தால் வில்லியம்சன் வெளியேறியிருப்பார். அதன்பின்னர் டி கிராண்ட் ஹோமை தவிர நியூசிலாந்து அணியில் பேட்ஸ்மேன் இல்லை. எனவே தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. இந்த சம்பவம் நடந்த பிறகு வெறும் 11 ஓவர்கள் தான் இருந்தன. அப்படியிருக்கையில், முக்கியமான நேரத்தில் முக்கியமான வீரரின் விக்கெட்டுக்காக அந்த ரிவியூவை எடுப்பதில் தவறில்லை. அது அவுட்டாக இல்லையென்றாலும் கூட அந்த ரிவியூவை இழப்பது பெரிய விஷயமல்ல. 

du plessis speaks about missed to taked drs for williamson wicket

ஆனால் அந்த சூழலில் ரிவியூவை எடுத்திருந்தால் போட்டி மாறியிருக்கக்கூடும். இந்நிலையில், அந்த ரிவியூ எடுக்காதது குறித்து பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் டுப்ளெசிஸ், பந்து பேட்டில் கண்டிப்பாக படவில்லை என்று நான் நினைத்தேன். போட்டி முடிந்த பின்னர்தான் பந்து பேட்டில் பட்டது தெரிந்தது. ஆனாலும் அந்த ரிவியூவை எடுத்திருந்தாலும் அது ஆட்டத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்காது என்று டுப்ளெசிஸ் தெரிவித்துள்ளார். 

கண்டிப்பாக வில்லியம்சனின் விக்கெட்டை ரிவியூ எடுத்து வீழ்த்தியிருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்க வாய்ப்புள்ளது. ஆனால் என்ன செய்வது? தவறு செய்து முடிச்சாச்சு.. அட்லீஸ்ட் ரிவியூவால் போட்டி முடிவு மாறியிருக்காது என்று கூறியாவது மனதை தேற்றிக்கொள்ள வேண்டுமல்லவா..?
 

Follow Us:
Download App:
  • android
  • ios