ருத்துராஜ் கெய்க்வாட்டின் காதலி உட்கர்ஷா பவார் யார் தெரியுமா?
மகாராஷ்டிரா கிரிக்கெட் டீம் வீராங்கனை உட்கர்ஷா பவார் மற்று இந்திய கிரிக்கெட் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் இருவரும் வரும் 4ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர்.
ஐபிஎல் திருவிழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கி 590 ரன்கள் குவித்தவர் ருத்துராஜ் கெய்க்வாட். எம்.எஸ்.தோனியின் ஒய்விற்கு பிறகு சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனது முதல் ஒரு நாள் போட்டியில் அறிமுகமான சிஎஸ்கே வீரர்: ஆப்கானிஸ்தான் பவுலிங்!
இந்த சீசனில் 5ஆவது முறையாக ஐபிஎல் டிராபியை கைப்பற்றிய சிஎஸ்கே வீரர்கள் தங்களது குடும்பத்தோடு கொண்டாடினர். அதில் ருத்துராஜ் கெய்க்வாட் தனது காதலியான உட்கர்ஷா பவார் உடன் கலந்து கொண்டார். ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் உட்கர்ஷா பவார் இருவருக்கும் திருமணம் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இருவருக்கும் வரும் 4ஆம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது.
ஏன் மூடிய ஸ்டேடியத்தில் கிரிக்கெட் விளையாடுவதில்லை தெரியுமா?
இருவரும் சிஎஸ்கே கேப்டன் தோனியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உட்கர்ஷா பவார், மகாராஷ்டிரா கிரிக்கெட் வீராங்கனை. இவர், ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளார். புனே பல்கலைக்கழகத்தில் பிட்னெஸ் தொடர்பான படிப்பு படித்து வருவதால், இவர் கிரிக்கெட்டிலிருந்து விலகியுள்ளார். இந்த நிலையில் தான் கெய்க்வாட் மற்றும் உட்கர்ஷா பவார் இருவருக்கும் இடையில் திருமணம் நடக்க இருக்கிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணிக்கு புதிய ஜெர்சி! ஆஸி.யை வீழ்த்த ராசியாக இருக்குமா?