Smriti Mandhana Net Worth: ஆர்சிபி மகளிர் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனில் சாம்பியனான ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் நிகர சொத்து மதிப்பு ரூ.33 கோடி என்று சொல்லப்படுகிறது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் நேற்று முடிந்தது. இதில், முதல் முறையாக ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி சாம்பியனானது. கடந்த 1996 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி மும்பையில் பிறந்தவர் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. கடந்த 2013 ஆம் ஆண்டு வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
அதே ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதே போன்று 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். கடந்த 2018 ஆம் ஆண்டு சிறந்த மகளிர் சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருது பெற்றார்.
மகளிர் பிக்பேஸ் லீக், கியா சூப்பர் லீக், நூறு பால் கிரிக்கெட் தொடர் ஆகிய போட்டிகளில் விளையாடியுள்ளார். மகளி பிரீமியர் லீக் தொடரிலும் இடம் பெற்று விளையாடியுள்ளார். இந்த நிலையில் தான் ஸ்மிருதி மந்தனாவின் நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.33,16,34,200 கோடி என்று சொல்லப்படுகிறது.
பிசிசிஐ மூலமாக பெறும் சம்பளம், மகளிர் பிரீமியர் லீக், விளம்பரங்கள், ஒப்புதல் மற்றும் முதலீடு ஆகியவற்றின் மூலமாக வரும் வருமானத்தின் மூலமாக அவரது நிகர மதிப்பு ரூ.33 கோடி என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஸ்மிருதி மந்தனாவின் சொத்து மதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு கணக்கின்படி ரூ.7 கோடி, 2018 ஆம் ஆண்டு ரூ.10 கோடி, 2019 ஆம் ஆண்டு ரூ.15 கோடி, 2020 ஆம் ஆண்டு ரூ.21 கோடி, 2021 ஆம் ஆண்டு ரூ.25 கோடி ஆகும். கடந்த 2022 ஆம் ஆண்டு ரூ.29 கோடி ஆகும். கடந்த 2023 ஆம் ஆண்டு ரூ.32 கோடி என்று சொல்லப்படுகிறது.
ஸ்மிருதி மந்தனா A காண்ட்ராக்ட் மூலமாக பிசிசிஐயிடமிருந்து ஒரு வருடத்திற்கு ரூ.50 லட்சம் பெறுகிறார். அதுமட்டுமின்றி டபிள்யூபிஎல் மூலமாக ரூ.3.4 கோடி வருமானம் பெறுகிறார். டெஸ்ட் போட்டிக்கு என்று ரூ.15 லடசமும், ஒரு நாள் போட்டிக்கு ரூ.6 லட்சமும், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சமும் சம்பளம் வாங்குகிறார்.
கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு ரூ.2 முதல் ரூ.5 கோடி வரையில் வருமானம் ஈட்டுகிறார். தற்போது இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆவார். இது தவிர பிராண்ட் ஒப்பந்தங்கள் மூலமாகவும் வருமானம் ஈட்டி வருகிறார். Equitas Small Finance, Playerzpot, Bata, Alcon Hydrophobic Lenses, Spektacom Technologies, Garnier, Red Bull மற்றும் Hero Motocorp ஆகியவை அவரது ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களில் அடங்கும். இந்த ஒப்பந்தம் மூலமாக அவர் போதுமான வருமானம் ஈட்டுகிறார்.
SM 18 Café என்ற பெயரில் ரெஸ்டாரண்ட்டும் நடத்தி வருகிறார். மேலும், முதல் முதலாக மாருதி ஸ்விப்ட் டிசையர் கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். இந்த காரை அவரது அப்பாவிற்கு பரிசாக அளித்துள்ளார். இந்த கார் மட்டுமின்றி ரேஞ்ச் ரோவர், ஹூண்டாய் கிரேட்டா, ஆடி, பிஎம்டபிள்யூ ஆகிய கார்களையும் வாங்கியுள்ளார்.
ஸ்மிருதி மந்தனாவுக்கு மும்பை மற்றும் டெல்லியில் இரண்டு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த 2 அடுக்குமாடி குடியிருப்புகளும் ஆடம்பரமாகவும், சிறப்பாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஸ்மிருதி தனது வருமானத்தின் பெரும்பகுதியை பின்தங்கிய ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் மற்ற அடிப்படைத் தேவைகளுக்கு வழங்குகிறார். அவர் மட்டுமின்றி தனது ரசிகர்களை ஏழைகளுக்கு உதவுவதற்கும் தூண்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Asianet News Tamil
- Cricket
- SM 18 Cafe
- Smriti Mandhana
- Smriti Mandhana BCCI Annual Salary
- Smriti Mandhana Brand Endorsements
- Smriti Mandhana Car Collection
- Smriti Mandhana House
- Smriti Mandhana Net Worth
- Smriti Mandhana ODI Match Salary
- Smriti Mandhana RCB Salary
- Smriti Mandhana T20 Match Salary
- Smriti Mandhana Test Match Salary
- Smriti Mandhana WPL Salary
- Smriti Mandhana restaurant