இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஷிவம் துபேயின் சொத்து மதிப்பு ரூ.29 கோடியாம்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்று முதல் 2 டி20 போட்டிகளில் அடுத்தடுத்து அரைசதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஷிவம் துபேயின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.29 கோடி என்று கூறப்படுகிறது.

Do You Know about Indian Cricket Player Shivam Dube Net Worth Value, Cars, IPL Salary and His Wife? rsk

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தவர் ஷிவம் துபே. முதல் முறையாக கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் மட்டும் விளையாடி 9 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் ஷிவம் துபேவிற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதே போன்று, 2019 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி நடந்த வங்கதேச அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில போட்டிகளில் மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று வந்த ஷிவம் துபேவிற்கு தற்போது இந்திய அணியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரானது சிறப்பாக ஒரு இடத்தை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பெற்று விளையாடி வருகிறார். முதல் டி20 போட்டியில் 2 ஓவர்கள் வீசி 9 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். ஆனால், பேட்டிங்கில் 40 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 60 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இதே போன்று 2ஆவது டி20 போட்டியிலும் 3 ஓவர்கள் வீசிய ஷிவம் துபே 36 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். மேலும், பேட்டிங்கில் 32 பந்துகளில் 5 பவுண்டரி 4 சிக்சர் உள்பட 63 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதையடுத்து, கூடிய விரைவில் இந்திய அணியில் நிரந்தரமான ஒரு இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பெங்களூருவில் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் தான் இவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.29 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரூ.4 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாடி வருகிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ரூ.5 கோடிக்கு இடம் பெற்று விளையாடினார். ஆர்சிபி அணியில் 2 சீசன்கள் கடந்த பிறகு ரூ.4.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார். கடந்த 2021 ஆம் ஆண்டு அஞ்சும் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

துபே மும்பையில் உள்ள தனது சொந்த வீட்டில் வசிக்கிறார். பல ரியல் எஸ்டேட் சொத்துக்களை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அவரது கார்களின் சேகரிப்பில் மெர்சிடிஸ் எஸ்யூவியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios