சையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழ்நாடு மற்றும் உத்தர பிரதேச அணிக்கு எதிரான போட்டி கடந்த 12ம் தேதி நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி, 20 ஓவரில் 168 ரன்கள் அடித்தது. உத்தர பிரதேச அணி 169 ரன்கள் என்ற இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

அந்த போட்டியில் அதிரடியாக ஆடிய தமிழ்நாடு அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 61 ரன்களை குவித்து ஹிட் விக்கெட் ஆகி ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் ஹிட் விக்கெட் ஆனதன் மூலம் லிஸ்ட் ஏ, முதல் தர போட்டிகள் மற்றும் டி20 ஆகிய மூன்றுவிதமான போட்டிகளிலும் ஹிட் விக்கெட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை செய்துள்ளார் தினேஷ் கார்த்திக்.