Asianet News TamilAsianet News Tamil

டிசிப்ளின் இல்லையே டி.கே..! எல்லை மீறிட்டீங்க; பார்த்து நடந்துக்கங்க.. வார்னிங் வாங்கிய தினேஷ் கார்த்திக்

ஐபிஎல் ஒழுக்க விதிகளை மீறி நடந்த கேகேஆர் வீரர் தினேஷ் கார்த்திக்கை ஐபிஎல் நிர்வாக குழு எச்சரித்துள்ளது.
 

dinesh karthik reprimanded for breaching ipl code of conduct
Author
Sharjah - United Arab Emirates, First Published Oct 14, 2021, 4:10 PM IST

ஐபிஎல் 14வது சீசனின் 2வது தகுதிச்சுற்று போட்டி கேகேஆர் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையே ஷார்ஜாவில் நடந்தது.  இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணி 20 ஓவரில் 135 ரன்கள் அடிக்க, 136 ரன்கள் என்ற இலக்கை கடைசி ஓவரில் அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கேகேஆர் அணி, ஃபைனலுக்கு முன்னேறியது.

இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் 3 பந்தில் ரன்னே அடிக்காமல் ரபாடாவின் பவுலிங்கில் போல்டாகி வெளியேறினார். போல்டான விரக்தியில் ஸ்டம்ப்பை தட்டிவிட்டு சென்றார். ஐபிஎல் நடத்தை விதி 2.2ன் முதல் லெவல் விதிமீறல் இது.

இதையும் படிங்க - அமீரகத்தில் நாங்கதான் கிங்.. இந்தியாவை வீழ்த்திருவோம்..! பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அதிரடி

இதுகுறித்து போட்டி நடுவர் விசாரித்தபோது, தனது தவறை ஒப்புக்கொண்டார் தினேஷ் கார்த்திக். இதையடுத்து ஐபிஎல் நிர்வாகக்க்குழு சார்பில் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் இந்த விஷயத்தில், தினேஷ் கார்த்திக்கிற்கு ஆட்ட நடுவர் என்ன தண்டனை கொடுக்கிறாரோ அதை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios