Asianet News TamilAsianet News Tamil

#ICCWTC ஃபைனல்: அந்த ஒரு விஷயம் இந்தியாவைவிட நியூசிலாந்துக்கு சாதகம்..! முன்னாள் வீரர் அதிரடி

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்பாக, இங்கிலாந்தில் இங்கிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடிவரும் நியூசிலாந்து அணிக்கு அது கூடுதல் பலமாக அமையும் என்று திலீப் வெங்சர்க்கார் கருத்து கூறியுள்ளார்.
 

dilip vengsarkar opines new zealand have more advantage thatn india in icc wtc final
Author
Chennai, First Published Jun 6, 2021, 4:05 PM IST

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மட் போட்டிகளுக்கு உலக கோப்பையை நடத்தும் ஐசிசி, முதல் முறையாக டெஸ்ட் போட்டிக்கான சாம்பியன்ஷிப் தொடரை நடத்துகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதி போட்டிக்கு முந்தைய போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதலிரண்டு இடங்களை பிடித்தன. இதையடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மேட்ச் வரும் ஜூன் 18-22ல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடக்கிறது.

ஃபைனலில் வெற்றி பெற்று முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் முனைப்பில் தான் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுமே உள்ளன.  வலுவான இரு அணிகள் இறுதி போட்டியில் மோதுவதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். மைக்கேல் வான், பாட் கம்மின்ஸ் ஆகியோர் இங்கிலாந்து கண்டிஷன் இந்தியாவை விட நியூசிலாந்துக்குத்தான் கூடுதல் சாதகமாக இருக்கும் என்றும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன், இங்கிலாந்தில் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து ஆடும் 2 டெஸ்ட் போட்டிகள் அந்த அணிக்கு நல்ல மேட்ச் பிராக்டிஸாக அமையும் என்பதால், அந்த விஷயத்தில் இந்திய அணி பாதிக்கப்படுவதாகவும் ஒரு கருத்து இருக்கிறது.

ஆனால் அதெல்லாம் மேட்டரே இல்லை என்றும், இந்திய அணி டாப் டீம் என்றும் கவாஸ்கர் கருத்து கூறியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திலீப் வெங்சர்க்கார், விராட் கோலி,  ரோஹித் சர்மா ஆகிய உலகத்தரம் வாய்ந்த தலைசிறந்த வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர்.  அவர்கள் இந்திய அணிக்கு போட்டியை வென்றுகொடுக்க கூடியவர்கள். அவர்கள் இருவரும் நல்ல ஃபார்மில் இருப்பது கூடுதல் பலம். ஆனால் மேட்ச் பிராக்டீஸ் இல்லாததுதான் பிரச்னை.  நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு எதிராக ஆடும் 2 டெஸ்ட் போட்டிகள் அந்த அணிக்கு மேட்ச் பிராக்டீஸாக அமையும் என்பதால் அது அந்த அணிக்கு கூடுதல் சாதகமாகவும் பலமாகவும் அமையும் என்று வெங்சர்க்கார் கருத்து கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios