இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வீரருமான தோனி ராணுவ பயிற்சியில் இணைந்துள்ளார். பாராசூட் ரெஜிமெண்டில் கலந்துகொள்வதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து தோனி விலகினார். 

வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகி இரண்டு மாதங்களுக்கு ராணுவ பயிற்சியில் ஈடுபட சென்றார். தோனிக்கு ராணுவ பயிற்சியில் ஈடுபட அவருக்கு ராணுவம் தரப்பில் அனுமதியும் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், அவர் வரும் 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை ராணுவ பயிற்சி மற்றும் அடிப்படை பணிகளில் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ராணுவ தாக்குதல்களில் அவர் கலந்துகொள்ள முடியாது. பயிற்சிகளில் மட்டும் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.