தோனி கிரிக்கெட் ஆடினாலும் ஆடாவிட்டாலும் தலைப்பு செய்தியில் அவர்தான் இருப்பார். அதுதான் இப்போதும் நடந்துள்ளது. உலக கோப்பைக்கு பின் தோனி ஓய்வு குறித்த விவாதம் வலுத்தது. தோனி ஓய்வு அறிவிக்கவில்லை என்றாலும், அவருக்கு அணியில் இடமில்லை என்பதை தேர்வுக்குழு வெளிப்படையாகவே தெரிவித்தது. 

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தோனி இடம்பெறுவாரா இல்லையா என்பது ஹாட் டாபிக்காக போய்க்கொண்டிருந்த நிலையில், ”நீங்க சேர்த்துகிட்டாலும் நான் வரலப்பா” என்கிற ரீதியில், ராணுவ பயிற்சிக்காக போகப்போவதாக கூறி, அணி அறிவிக்கும் முன்னரே தன்னை விடுவித்துக்கொண்டார் தோனி. 

இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்க, தோனியோ எல்லைப்பகுதியில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டார். பாராசூட் ரெஜிமெண்ட், ரோந்து என தோனியின் இரண்டு வார கால ராணுவ பயிற்சி முடிந்துவிட்டது. 

இந்நிலையில், தோனி ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் சில சிறுவர்களுடன் ராணுவ உடையில் கிரிக்கெட் ஆடும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகிவருகிறது. கூடைப்பந்து மைதானத்தில் தோனி ராணுவ உடையில் பேட்டிங் ஆடும் அந்த புகைப்படத்தை சிஎஸ்கே அணி நிர்வாகம், டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. அது தற்போது செம வைரலாகிவருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Different field. Different gamepLeh. #Thala @mahi7781 #WhistlePodu 🦁💛

A post shared by Chennai Super Kings (@chennaiipl) on Aug 17, 2019 at 3:19am PDT