உலக கோப்பைக்கு முன்னதாக பயிற்சி போட்டிகள் நடந்துவருகின்றன. இந்தியாவும் நியூசிலாந்தும் மோதிய நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாப் ஆர்டர்கள் ஏமாற்றிய நிலையில், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் நன்றாக பேட்டிங் ஆடினர். இந்த போட்டியில் தோனி, விக்கெட் கீப்பிங் செய்யாமல் தினேஷ் கார்த்திக்கை விக்கெட் கீப்பிங் செய்யவைத்துவிட்டு ஃபீல்டிங் செய்தார். 

உலகின் நம்பர் 1 விக்கெட் கீப்பரான தோனி, இந்திய அணியின் வரப்பிரசாதம். அவருக்கு மாற்றாகத்தான் உலக கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக் அணியில் எடுக்கப்பட்டார். எனினும் பயிற்சி போட்டி என்பதால் இருவருமே ஆடினர். அதனால் இரண்டாவது இன்னிங்ஸில் இருவருமே களத்திற்கு வந்தனர். எப்போதும் விக்கெட் கீப்பிங் செய்தே தோனிக்கு சலித்துவிட்டபோலும்.. அதனால் தான் தினேஷ் கார்த்திக்கை விக்கெட் கீப்பிங் செய்யவைத்துவிட்டு ஃபீல்டிங் செய்தார். 

பவுண்டரி லைனில் இருந்து ஓடிவந்து தோனி ஃபீல்டிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.