Asianet News TamilAsianet News Tamil

#IPL2021 தோனி கொடுத்த ஐடியா.. மேக்ஸ்வெல்லின் ஸ்டம்ப்பை கழட்டிய ஜடேஜா..! வைரல் வீடியோ

தோனி கொடுத்த ஆலோசனையின் படி, மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

dhoni advice helps jadeja to got maxwell wicket in csk vs rcb match in ipl 2021
Author
Mumbai, First Published Apr 26, 2021, 4:53 PM IST

ஐபிஎல் 14வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கடந்த சீசனில் முதல் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறிய சிஎஸ்கே அணி, இந்த சீசனில் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

இந்த சீசனின் முதல் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த ஆர்சிபி அணிக்கு முதல் தோல்வியை பரிசளித்தது சிஎஸ்கே. அதற்கு காரணம் சிஎஸ்கே ஆல்ரவுண்டர் ஜடேஜா. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து வகையிலும் அபாரமாக செயல்பட்டு, தனி நபராக ஆர்சிபியை வீழ்த்தினார்.

பேட்டிங்கில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரியும் 36 ரன்களை விளாசினார் ஜடேஜா. அந்த ஓவரில் மட்டும் நோ பாலை சேர்த்து சிஎஸ்கே அணிக்கு 37 ரன்கள் கிடைத்தது. அதனால் தான் சிஎஸ்கே அணி 191 ரன்களை குவித்தது. 192 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆர்சிபி அணியின் அபாயகரமான பேட்ஸ்மேன்களான மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா, டேனியல் கிறிஸ்டியனை ரன் அவுட்டும் செய்தார்.

இப்படியாக அனைத்துவகையிலும் அபாரமாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதையும் வென்றார் ஜடேஜா. இந்த போட்டியில் மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை தோனியின் ஆலோசனையின்படி செயல்பட்டு ஜடேஜா வீழ்த்திய வீடியோ டுவிட்டரில் வைரலாகிவருகிறது.

9வது ஓவரின் 5வது பந்தில் மேக்ஸ்வெல்லை வீழ்த்தினார் ஜடேஜா. அந்த ஓவரின் 2வது பந்தில் மேக்ஸ்வெல் ஏற்கனவே ஒரு பவுண்டரி அடித்திருந்த நிலையில், அதன்பின்னர் ஒரு சிங்கிள் எடுத்த மேக்ஸ்வெல், மீண்டும் 5வது பந்தை எதிர்கொண்டார். அந்த பந்தை ஜடேஜா வீசுவதற்கு முன்பாக, “அவன்(மேக்ஸ்வெல்) அடித்தால் அடிக்கட்டும்.. பயப்படாமல் போடு” என்று தோனி கூறியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. தோனியின் ஆலோசனையின்படி, துணிந்து ஸ்டம்ப்புக்கு நேராக வீசினார் ஜடேஜா. மேக்ஸ்வெல் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அந்த வீடியோ டுவிட்டரில் வைரலாகிவருகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios