இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் இந்திய அணி, முதல் இரண்டு போட்டிகளில் ஆடிய அதே அணியுடன் ஆடுகிறது. ஆஸ்திரேலிய அணி குல்டர்நைலுக்கு பதிலாக ரிச்சர்ட்ஸ்னை சேர்த்து, ஒரேயொரு மாற்றத்துடன் ஆடுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஆரோன் ஃபின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா அருமையாக ஆடி சிறப்பான தொடக்கத்தை அமைத்துள்ளனர். பும்ரா, ஷமி ஆகியோரின் பவுலிங்கை சமாளித்து ஆடி ரன்களை சேர்த்த ஃபின்ச்-உஸ்மான் ஜோடி, குல்தீப், கேதர், ஜடேஜா ஆகியோரின் ஸ்பின் பவுலிங்கையும் நன்றாக ஆடினர்.

ஜடேஜா வீசிய 7வது ஓவரின் நான்காவதை பந்தை உஸ்மான் கவாஜா ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார். அது நேராக பாயிண்ட் திசையில் நின்ற தவானிடம் சென்றது. ஈசியான அந்த கேட்ச்சை தவான் தவறவிட்டார். அந்த வாய்ப்பை உஸ்மான் கவாஜா நன்கு பயன்படுத்தி கொண்டார். 

சிறப்பாக ஆடிய இருவருமே அரைசதம் அடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 150 ரன்களை கடந்து ஆடிவருகின்றனர்.