பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, 20 ஓவரில் 200 ரன்களை குவித்து 201 ரன்கள் என்ற கடின இலக்கை பஞ்சாப் கிங்ஸுக்கு நிர்ணயித்தது.  

ஐபிஎல் 16வது சீசனில் ஞாயிற்றுக்கிழமையான இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), மதீஷா பதிரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்‌ஷனா.

IPL 2023: மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர்..! பலமடையும் ரோஹித் சர்மா படை

பஞ்சாப் கிங்ஸ் அணி:

அதர்வா டைட், ஷிகர் தவான் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், சிக்கந்தர் ராஸா, சாம் கரன், ஜித்தேஷ் ஷர்மா, ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்

முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 9.4 ஓவரில் 86 ரன்களை குவித்தனர். 37 ரன்களுக்கு ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய ஷிவம் துபே 17 பந்தில் 28 ரன்கள் அடித்தார்.

IPL 2023: 1000வது ஐபிஎல் போட்டியில் மோதும் MI vs RR அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

தொடக்கம் முதலே அதிரடியாக பேட்டிங் ஆடிய டெவான் கான்வே அரைசதம் அடித்தார். மொயின் அலி 10 ரன்களுக்கும், ஜடேஜா 12 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அரைசதத்திற்கு பின்னரும் அதிரடியாக ஆடி சதத்தை நெருங்கிய டெவான் கான்வேவால் கடைசி வரை களத்தில் இருந்தும் சதமடிக்க முடியவில்லை. 92 ரன்களுடன் கடைசிவரை களத்தில் இருந்தார் டெவான் கான்வே. கடைசி ஓவரின் கடைசி 2 பந்திலும் சிக்ஸர் அடித்து தோனி சிறப்பாக முடித்து கொடுக்க, 20 ஓவரில் 200 ரன்களை குவித்த சிஎஸ்கே அணி, 201 ரன்கள் என்ற கடினமான இலக்கை பஞ்சாப் கிங்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.