IPL 2023: 1000வது ஐபிஎல் போட்டியில் மோதும் MI vs RR அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய போட்டியில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஞாயிற்றுக்கிழமையான இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் சிஎஸ்கே - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான போட்டி ஐபிஎல்லின் 1000வது போட்டி. மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
8 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் வலுவாக இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, 7 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசியிலிருந்து 2ம் இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொள்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி தேவை என்ற கட்டாயத்தில் வலுவான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆடுகிறார்.
உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், கேமரூன் க்ரீன், டிம் டேவிட், திலக் வர்மா, நெஹல் வதேரா, அர்ஜுன் டெண்டுல்கர், பியூஷ் சாவ்லா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேசன் பெஹ்ரண்டார்ஃப்.
உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், த்ருவ் ஜுரெல், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், சந்தீப் ஷர்மா, டிரெண்ட் போல்ட்.