Asianet News TamilAsianet News Tamil

IND vs NZ: டெவான் கான்வே காட்டடி சதம்.. கடின இலக்கை வெறித்தனமா விரட்டும் நியூசிலாந்து

இந்தியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 386 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிவரும் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே அதிரடியாக ஆடி சதமடிக்க, நியூசிலாந்து அணி கடின இலக்கை வெறித்தனமாக விரட்டிவருகிறது.
 

devon conway century while chasing tough target set by india to new zealand in last odi
Author
First Published Jan 24, 2023, 7:40 PM IST

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ்வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் நீக்கப்பட்டு, யுஸ்வேந்திர சாஹல் மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டனர். 

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், உம்ரான் மாலிக்.  

நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே, ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல், டாம் லேதம் (கேப்டன், விக்கெட் கீப்பர்), க்ளென் ஃபிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னெர், ஜேகப் டஃபி, லாக்கி ஃபெர்குசன், பிளைர் டிக்னெர்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி இருவருமே சதமடித்தனர். அதிரடியாக பேட்டிங் ஆடிய ரோஹித் சர்மா 83 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் சதமடித்தார். அவரைத்தொடர்ந்து ஷுப்மன் கில்லும் 74 பந்தில் பந்தில் சதமடித்தார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித்தும் கில்லும் இணைந்து 26.1 ஓவரில் 212 ரன்களை குவித்தனர். ரோஹித் சர்மா 101 ரன்களுக்கும், கில் 112 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின்னர் கோலி(36), இஷான் கிஷன்(17), சூர்யகுமார் யாதவ்(14) மற்றும் வாஷிங்டன் சுந்தர்(9) ஆகியோர் ஏமாற்றமளித்தனர். ஆனால் ஹர்திக் பாண்டியாவும் ஷர்துல் தாகூரும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி சிறப்பாக முடித்து கொடுத்தனர். ஷர்துல் தாகூர் 17 பந்தில் 25 ரன்கள் அடித்தார். மெதுவாக தொடங்கி பின்னர் காட்டடி அடித்த ஹர்திக் பாண்டியா அரைசதம் அடித்தார். 38 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் அடித்து ஹர்திக் பாண்டியா சிறப்பாக முடித்து கொடுக்க, இந்திய அணி 50 ஓவரில் 385 ரன்களை குவித்து, 386 ரன்கள் என்ற கடினமான இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்தது.

386 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை விரட்டிவரும் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலனை முதல் ஓவரிலேயே ரன்னே அடிக்கவிடாமல் ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். மற்றொரு தொடக்க வீரரான டெவான் கான்வே அடித்து ஆட, அவருடன் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹென்ரி நிகோல்ஸ் சிறப்பாக பேட்டிங் ஆட, 2வது விக்கெட்டுக்கு கான்வே-நிகோல்ஸ் ஜோடி 106 ரன்களை சேர்த்தது. நிகோல்ஸ் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஆனால் ஒருமுனையில் நிலைத்து நின்று இந்திய பவுலிங்கை அடித்து ஆடிய டெவான் கான்வே 74 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றூம் 7 சிக்ஸர்களுடன் சதம் விளாசினார். இன்னிங்ஸின் 24வது ஓவரிலேயே டெவான் கான்வே சதமடித்து விட்டதால் பெரிய ஸ்கோர் அடிக்க வாய்ப்பிருக்கிறது. 386 ரன்கள் கடினமான இலக்கு தான் என்றாலும், கான்வே களத்தில் நிலைத்து சதமடித்து தொடர்ந்து அதிரடியாக ஆடுவதால் இந்தியாவிற்கு நியூசிலாந்து கடும் சவாலளிக்கும். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios