Asianet News TamilAsianet News Tamil

#SRHvsDC டெல்லி அணியில் அக்ஸர் படேல்.. சன்ரைசர்ஸ் அணியிலும் ஒரு மாற்றம்..! டெல்லி கேபிடள்ஸ் முதலில் பேட்டிங்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 

delhi capitals win toss opt to bat against sunrisers hyderabad in ipl 2021
Author
Chennai, First Published Apr 25, 2021, 7:19 PM IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அக்ஸர் படேல், கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டதால், இன்றைய போட்டியில் அக்ஸர் படேல் ஆடுகிறார். அதனால் லலித் யாதவ் நீக்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷிம்ரான் ஹெட்மயர், அக்ஸர் படேல், அஷ்வின், ரபாடா, அமித் மிஷ்ரா, ஆவேஷ் கான். 

சன்ரைசர்ஸ் அணியில் புவனேஷ்வர் குமார் ஆடவில்லை. அதனால் அவருக்கு பதிலாக ஜெகதீஷா சுஜித் சேர்க்கப்பட்டுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

டேவிட் வார்னர்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன், விராட் சிங், விஜய் சங்கர், அபிஷேக் ஷர்மா, கேதர் ஜாதவ், ரஷீத் கான், ஜெகதீஷா சுஜித், கலீல் அகமது, சித்தார்த் கவுல்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios