ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியின் புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லி கேபிடள்ஸ் அணி கட்டமைப்பு:
ஐபிஎல் 15வது சீசனுக்கான ஏலத்திற்கு முன்பாக டெல்லி கேபிடள்ஸ் அணி, ரிஷப் பண்ட், அக்ஸர் படேல், பிரித்வி ஷா மற்றும் அன்ரிக் நோர்க்யா ஆகிய 4 வீரர்களை தக்கவைத்தது.
மெகா ஏலத்தில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், ரோவ்மன் பவல், டிம் சேஃபெர்ட், லுங்கி இங்கிடி ஆகிய வெளிநாட்டு வீரர்களையும், ஷர்துல் தாகூர், சர்ஃபராஸ் கான், குல்தீப் யாதவ், கமலேஷ் நாகர்கோடி, சேத்தன் சக்காரியா, மந்தீப் சிங், லலித் யாதவ், யஷ் துல், கலீல் அகமது ஆகிய இந்திய வீரர்களையும் ஏலத்தில் எடுத்தது.
ரிஷப் பண்ட் தலைமையில் வலுவான அணியை கட்டமைத்துள்ளது டெல்லி கேபிடள்ஸ் அணி. கடந்த சில சீசன்களாக பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் வழிகாட்டுதலில் அபாரமாக அபாரமாக விளையாடிவரும் டெல்லி கேபிடள்ஸ் அணி, இந்த சீசனிலும் வழக்கம்போலவே முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது.
புதிய ஜெர்சி:
இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியின் புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சீசன்களில் நீல நிறத்தில் மட்டும் இருந்த நிலையில், 15வது சீசனுக்கான புதிய ஜெர்சி நீலம் மற்றும் சிவப்பு நிறங்களின் கலவையாக உள்ளது. ஜெர்சியின் வலதுபுறம் முழுக்க நீல நிறம், இடது புறம் சிவப்பு நிறமாகவும் உள்ளது. இந்த ஜெர்சியை டெல்லி கேபிடள்ஸ் அணி டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.
